Latest News

September 10, 2013

ஜெனிவாவில் தீயில் ஆகுதியான செந்தில்குமரனின் மனதை இழக்கும் இறுதி வார்த்தைகள்….
by admin - 0

கடந்த செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகப்பேரொளி செந்தில்குமரன் அவர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக தன்இன்னுயிரை ஈய்ந்தார். அவர் வீரச்சாவடைந்த பின்னர் பலதரப்பட்ட செய்திகளும் வந்த நிலையில், அவர் தமது இறுதிக்கணத்திலும் எவ்வித சஞ்சலங்களும் இன்றி நிதானமாக உலகத்தழிழ் மக்களுக்கு காத்திரமான செய்தி ஒன்றை விடுத்துச் சென்றுள்ளார்.தீயினுள் சங்கமம் ஆவதற்கு முன்னர், தன்னுடைய கைத்தொலைபேசியில் தன்னுடைய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:அனைத்து தமிழ் மக்களுக்கும் நான் ரட்ணசிங்கம் செந்தில்குமரனாகிய நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்று சொல்லுவதென்றால்,எல்லா மக்களும் ஒன்றிணைந்து எமது உரிமையை வென்றெடுக்க வேண்டும்.எதிர்வரும் 16ம் திகதி ஒரு ஒன்றுகூடல் இருக்கின்றது. அதில் உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்.அதைவிட 30ம் திகதி மாபெரும் ஒன்றுகூடல் இருக்கின்றது. உங்கள் ஆதரவை வழங்கி உங்களுக்கு உரித்த உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
எமக்கென்று தனிநாடு கிடைக்க வேண்டும். இதற்காகவேண்டி நான் என்னுயிரை நீக்கின்றேன்.
எனது பிள்ளைகளை நீங்களே உங்கள் பிள்ளைபோல் பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.senthila_kumaran

« PREV
NEXT »

No comments