Latest News

September 10, 2013

ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்!
by Unknown - 0

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் எம்.பியுமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று திங்கட்கிழமை அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சார்பான கட்சியின் வேட்பாளர்களுக்காக இராணுவம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இரா.சம்பந்தன் இராணுவத்தை முகாம்களினுள் முடக்கி வைக்குமாறும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வட மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மக்களின் அன்றாட நடவடிக்கையில் ஈடுபடுவதையிட்டு நாம் உங்களின் கவனத்திற்கு முன்னரே கொண்டுவந்துள்ளோம்.

தற்போது இராணுவத்தின் நடவடிக்கைகள் தேர்தல் நடவடிக்கைகளிலும் பரவியுள்ளன. இராணுவத்தினர் சில வேட்பாளர்களின் சுவரொட்டிகளை ஒட்டுவதுடன் அவற்றை யாரும் அகற்றாதபடியும் காவல் செய்கின்றனர்.
இது இராணுவம் சில வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் நிறுத்தியுள்ளது எனும் எண்ணத்தை பரப்புவதாக உள்ளது. வேட்புமனுக்களை சமர்ப்பித்த அன்றே எமது வேட்பாளர்களில் மூவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

யாழ். நாவந்துறையில் சில ஆளும் கட்சி வேட்பாளர்களின் படங்களின் முன்னால் இராணுவம் கட்டிட பொருட்கள் வழங்குகின்ற காட்சியின் படம் ஒரு பத்திரிகையில் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இராணுவ தலையீடு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இராணுவத்தை முகாமில் முடக்கி செப்டெம்பர் 21ஆம் திகதி ஓரு சுயாதீன தேர்தலுக்கு தடையாக உள்ள காராணியை அகற்றுமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments