Latest News

September 05, 2013

இன்று லண்டனில் சனல் 4 கின் புது கொலைக்களங்கள் வெளியிடப்படுகிறது !arhirvu
by admin - 0

இன்று (05) லண்டனில் சனல் 4 தயாரித்துள்ள புதிய கொலைக்களங்கள் ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது. குறித்த இந்த ஆவணப்படத்தை காலம் மக் ரே அவர்கள் வெளியிடவுள்ளார். பிரித்தானியாவில் உள்ள சனல் 4 கின் முக்கிய ஊடகவியலாளர்கள், அதிதிகள், புத்திஜீவிகள் மற்றும் பிற ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இம் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் அமர்வுகள் இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு , அதனூடாக ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்த தற்போது பிரித்தானியா தாயாராகியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே , இன்றைய தினம் கொலைக்களங்கள் வெளியிடப்படவுள்ளது. இந்த குறிப்பிட்ட ஆவணப்படத்தில் வரும் சில பிரத்தியேகக் காட்சிகளை அதிர்வு இணையமே சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இறுதிப் போர் நடைபெற்றவேளை புலிகளின் ஊடகப் பிரிவினர், முள்ளிவாய்க்காலில் இருந்து அதிர்வு இணையத்திற்கு அனுப்பிவைத்த பல பிரத்தியேக வீடியோக் காட்சிகள் இருக்கிறது. இதில் சிலவற்றை அதிர்வு இணையம் வழங்கியுள்ளது. நாளை நடைபெறவுள்ள நிகழ்வுகள் சிலவேளைகளில் (தொழில்நுட்ப்ப வசதிகள் கைகூடினால்) நேரலையாக தர இருக்கிறோம் என்பதனையும் அறியத்தருகிறோம்.
« PREV
NEXT »

No comments