Latest News

September 13, 2013

2015ஆம் ஆண்டில் தான் ஜனாதிபதி தேர்தல் சாத்தியம் - கெஹெ­லிய ரம்­புக்­வெல
by Unknown - 0

அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அடுத்த ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் 2015 ஆம் ஆண்­டி­லேயே நடை­பெறும் சாத்­தியம் உள்­ளது. 2014 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­று­வ­தற்­கான சாத்­தியம் இல்லை என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

ஊட­கத்­துறை அமைச்சில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.


அடுத்த வருடம் ஆட்­சியை கைப்­பற்­ற­வுள்­ள­தாக எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார். அப்­ப­டி­யானால் அடுத்த வருடம் பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்­லது ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­றுமா? என்று கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டது.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,


கடந்த பல வரு­டங்­க­ளாக ரணில் விக்கி­ர­ம­சிங்க இந்த விட­யத்தை கூறி­வ­ரு­கின்றார். ஐக்­கிய தேசிய கட்­சியின் 55 ஆவது ஆண்டு விழா­விலும் இதனை குறிப்­பி­ட்­டி­ருந்தார். ஆனால் ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஜனா­தி­பதி பதவிப் பிர­மாணம் ஏற்று நான்கு வரு­டங்­களின் பின்னர் அடுத்த இரண்டு வருட காலப்­ப­கு­தியில் எப்­போது வேண்­டு­மா­னாலும் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்தும் முடிவை ஜனா­தி­பதி எடுக்­கலாம்.

அவ்­வாறு இந்த இரண்டு வரு­டங்­களில் அவர் தேர்­தலை நடத்­தா­விட்டால் ஆறு வரு­டங்­களின் முடிவில் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­த­வேண்டும். அந்த வகையில் பார்க்­கும்­போது ஜனா­தி­பதி பதவிப் பிர­மாணம் செய்து 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே நான்கு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. எனவே 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை.

« PREV
NEXT »

No comments