Latest News

August 13, 2013

இலங்கையிடம் இந்தியா ஆயுதக் கொள்வனவு
by admin - 0

இந்திய அரசானது இலங்கையிடமிருந்து கடந்த 3 வருடத்தில் ஆயுதம் கொள்வனவு செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி இத்தகவல்களை லோக்சபாவில் வெளியிட்டுள்ளார்.

லோக் சபாவில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்துள்ள அவர் இந்திய ஆயுதக்கொள்வனவு தொடர்பான தகவல்களை அறிவித்துள்ளார்.

இதன்படி இந்திய முப்படைகளானது கடந்த 3 வருட காலப்பகுதியில் சுமார் 2.35 கோடி ரூபாக்களை ஆயுதக் கொள்வனவுக்கென செலவிட்டுள்ளது.

ரஸ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், போலாந்து, ஸ்லோவாக்கியா, பின்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிடமிருந்தே இக்கொள்வனவை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments