Latest News

August 13, 2013

பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் திருப்தியளிக்கின்றன: ஹக்கீம்
by admin - 0

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது ஆயுதங்களுடன் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தமக்கு திருப்தியளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று அக்கட்சி உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது. இதன்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

முஸ்லிம் சமூகத்தினை நோக்கிய மதம் சார்ந்த குரோதமான செயல்களை தடுத்த நிறுத்த வேண்டும். மேலும் இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவ்விசாரணைகள் எமக்கு திருப்தியளிக்கின்றன.

இதேவேளை எமது கட்சியும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

« PREV
NEXT »

No comments