Latest News

August 13, 2013

பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றினால் ஓட ஓட விரட்டுவோம்: பொது பல சேனா
by admin - 0

இலங்கை பல்­லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என பொது ­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்தார். 
பொது ­ப­ல­சே­னாவின் குரு­ணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் சத்­தி­ய­வாதி மைதா­னத்தில் நடை­பெற்­றது. 

அங்கு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

இலங்கை ஒரு சிங்­கள நாடு. உலகில் வேறு சிங்­கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்கள் சிங்­கள பெளத்­தர்­களின் ஏழ்­மையைப் பயன்­ப­டுத்தி மதம் மாற்றி வரு­கின்­றன. இந்தச் செயற்­பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்­லா­விடின் அவர்­களை ஓட ஓடத் துரத்­துவோம். முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்­பா­டு­களை முஸ்லிம் நாடு­க­ளுக்குச் சென்று மேற்­கொள்ள வேண்டும். பெளத்த நாட்டில் இதற்கு இட­மில்லை. பெளத்த குடும்­பத்தில் கூடு­த­லாகப் பிள்­ளை­களைப் பெற வேண்டும் என்றார்.

எழுத்­தாளர் சமில லிய­னகே
இங்கு எழுத்தாளர் சமில லியனகே உரையாற்றுகையில், குரு­வைக்­கல்லு என்ற தமிழ்ப்­பெ­யரே இன்று குரு­ணாகல் என்று திரி­ப­டைந்­துள்­ளது. குரு­ணாகல் அத்­து­கல்­புர எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட வேண்டும். 2012 கணக்­கெ­டுப்­பின்­படி இலங்­கையில் எட்டு மாவட்­டங்­களில் பெளத்­தர்­களின் எண்­ணிக்கை வீழ்ச்சி அடைந்­துள்­ளது. வடமேல் மாகா­ணத்தில் இது அதி­க­மாக உள்­ளது. சிங்­க­ள­வர்­களை அழிக்க வேண்­டு­மானால் சிங்­களத் தன்­மையை இல்­லாமற் செய்ய வேண்டும். அதையே இன்று அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் செய்து வரு­கின்­றன. இன்று தேசியக் கொடிக்கு மதிப்புக் கொடுக்­காத இளைஞர் சமு­தா­ய­மொன்று உரு­வா­கி­யுள்­ளது. இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பெளத்த பாரம்­ப­ரி­யத்­தையும் பழ­மை­யையும் ஏனை­ய­வ­ருக்கு விற்று வரு­கின்­றனர்.

இன்று அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் எமது வேடர் பரம்­ப­ரை­யி­னரின் இரத்த மாதி­ரி­களை எடுத்து வெளி­நாட்டு மருந்துக் கம்­ப­னி­க­ளுக்கு விற்று வரு­கின்­றன. பால் தரும் பசுக்­களை இறைச்­சிக்­க­டை­க­ளுக்கு விற்று நியூ­சி­லாந்தில் இருந்து பால் மாவை இறக்­கு­மதி செய்து வரு­கின்­றனர்.

இந்­தியா அல்ல யுத்­தத்தை வெற்றி கொள்ள உத­விய நாடு. எமது இரா­ணுவ வீரர்­களின் முயற்­சியே வெற்றி பெற்றுத் தந்­தது. யுத்தப் பிர­தே­சத்தின் 39 அரச சார்­பற்ற அலு­வ­ல­கங்­களில் நவீன பங்­கர்கள் காணப்­பட்­டன. இவர்­களே இன்று ஜெனீவா சென்று எம்மைத் தூற்­று­கின்­றனர். பாது­காப்புச் செய­லா­ளரைக் கொலை செய்ய இவர்­களே வடக்­கி­லி­ருந்து குண்டை தங்கள் வாக­னத்தில் கொண்டு வந்­தனர்.

பிர­பா­க­ரனின் மறு அவ­தா­ர­மா­கவே இன்று விக்­கி­னேஸ்­வரன் உரு­வெ­டுத்­துள்ளார். இவரின் செய்­கை­களும் பேச்­சுக்­களும் திருப்தி தரு­வ­தாக இல்லை. இவரை ஆரம்­பத்­தி­லி­ருந்தே கட்­டுப்­ப­டுத்த ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். புத்த பிக்­குகள் ஜனா­தி­ப­தி­யிடம் இது தொடர்­பாக கோரிக்கை விட வேண்டும் என்றார்.

அத்தே ஞான சாரதேரர்
இக் கூட்டத்தில் பொது­ப­ல­சேனாவின் செய­லாளர் வண. கல­கொட அத்தே ஞான­சார தேரர் உரையாற்றுகையில்
சமா­தா­னத்தை விரும்பும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு ஆத­ரவை நல்­கு­கின்­றனர். அர­சி­யல்­வா­தி­களும் கடும் போக்­கா­ளர்­களும் சில ஊட­கங்­க­ளுடன் இணைந்து எம்மைத் தூற்றி வரு­கின்­றனர். சில அர­சி­யல்­வா­திகள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து எமக்கு எதி­ராக சதி செய்­கின்­றனர். கிறிஸ்­தவ முஸ்லிம் அமைப்­புக்கள் எம்மை ஆத்­தி­ர­மூட்டி வரு­கின்­றன. சிலர் எம்மை அர­சாங்­கத்தின் அடி­வ­ரு­டிகள் என கூறி வரு­கின்­றனர். எப்­படி இருந்த போதிலும் எமது செயற்­பா­டு­களை தடுக்க முடி­யாது.

இலங்­கையில் இனி விகா­ரைகள், கோயில்கள், பள்­ளி­வா­சல்கள், தேவா­ல­யங்கள் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை­யில்லை. இதற்­கான சட்­ட­மொன்றை ஜனா­தி­பதி கொண்டு வர வேண்டும்.

பெளத்­தர்­களின் தேவை­களை நிறை­வேற்ற இன்று ஒரு­வ­ரு­மில்லை. ஆனால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அனைத்­தையும் வழங்க பலரும் உள்­ளனர். முஸ்­லிம்­களால் எமக்கு ஏற்­பட்­டுள்ள இடர்கள் தொடர்­பாக அனைத்து பெளத்த அமைப்­புக்­களும் கலந்து உரை­யாடி அதற்கு எதி­ராக தீர்­மானம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.
பள்­ளி­வா­சல்­களில் முஸ்­லிம்கள் எமக்­கெ­தி­ராகப் பேசும் விட­யங்கள் வெளி­வ­ரு­வ­தில்லை. பிக்­குகள் அர­சி­யல்­வா­தி­களின் பின்னால் செல்லத் தேவை­யில்லை. நாம் புத்­தரின் சீடர்­க­ளே­யன்றி ஏனை­ய­வர்­களின் சீடர்கள் அல்ல. 1948 இன் பின் பெளத்த அர­சி­யல்­வா­திகள் எம்மை ஏமாற்றி விட்­டனர். இலங்கை ஒரு சிங்­கள பெளத்த நாடு என்று கூறு­ப­வர்­க­ளுக்கே சிங்­க­ள­வர்கள் வாக்­க­ளிக்க வேண்டும். இலங்­கையில் போதை­வஸ்து பெருக்­கத்­திற்கு அர­சி­யல்­வா­திகள் காரணம். போதை­வஸ்து வியா­பா­ரி­களை அவர்­களே பாது­காக்­கின்­றனர்.

இலங்­கையில் இன்று தெளபீக் ஜமாத்­தி­னரால் பிரச்­சி­னைகள் உரு­வாகி வரு­கின்­றன. மத்­திய கிழக்கு நாடு­களில் பிரச்­சி­னை­களைத் தோற்­று­வித்­துள்ள இவர்கள் இந்­தி­யாவில் தமிழ் நாட்­டிலும் காலூன்றி உள்­ளனர். உலகில் இவர்­களால் 52 நாடு­களில் பிரச்­சினை கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் வெள்­ளிக்­கி­ழமை பெரு­நாளைக் கொண்­டா­டும்­படி கூறிய போது கிழக்கில் வியா­ழக்­கி­ழமை கொண்­டா­டிய குழு­வினர் இவர்கள் ஏட்­டிக்குப் போட்­டி­யாக இவர்­களின் செயற்­பா­டு­களால் சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­க­ளுமே பெரிதும் பாதிக்­கப்­ப­டுவர்.

முஸ்­லிம்கள் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்திக் கொண்டு சிறப்­பாக வாழட்டும். அதில் எவ்­விதப் பிரச்­சி­னை­யு­மில்லை. ஆனால் அர­புச்­சட்­டங்­களை இங்கு கொண்டு வர முடி­யாது. பெளத்த மதம் தொடர்­பான இழி­வான துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை தெளபீக் ஜமாத்­தினர் வெளி­யிட்­டுள்­ளனர். பாது­காப்புப் பிரி­வினர் இவர்­களைக் கட்­டுப்­ப­டுத்தாவிட்டால் நாம் அவர்களைக் கட்டுப்படுத்துவோம்.

பெளத்த பயங்கரவாதம் என வெளியுலகிற்கு இக்குழு தவறான தகவல்களை வழங்கி உதவி பெற்று இலங்கையை துண்டாட இக்குழு முயற்சி செய்கின்றது. ஜமாத்தே இஸ்லாம் குழு கிழக்கில் இயங்குவது நாட்டுக்கு ஆபத்து. கடும் போக்குள்ள இக்குழுக்களிடம் இருந்து இலங்கை முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று பிக்­கு­வாக துற­வறம் மேற்­கொள்ள வரு­ப­வர்கள் குறைவு. ஆட்­களைத் தேடிக்கண்டு பிடிக்­கவும் கஷ்­ட­மாக உள்­ளது. பிக்­குகள் முன் வந்து பெளத்­தத்தைக் காப்­பாற்ற வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments