Latest News

August 13, 2013

முறிகண்டி ஆலயத்தை மோதி அடியோடு பிரட்டிய இலங்கை மின்சார சபை வாகனம்
by admin - 0

முறிகண்டில் உள்ள பழைய முறிகண்டி ஆலயத்தை இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று மோதி அடியோடு பிரட்டியிருந்தது. 
பன்னெடுங்காலமாக இருந்த தொன்மை மிகுந்த ஆலயத்தை பிரட்டிய செயற்பாடு இப்பகுதி மக்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டில் இந்து ஆலயங்கள் பலவும் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியமை, விக்கிரகங்கள் அழிப்பு என தொடர் சம்பவங்கள் இடம்பெற்று வந்த வேளை விபத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் எதிர்பாராத விபத்தினாலேயே ஆலயத்தில் தமது வாகனம் மோதுண்டதாக வாகனச்சாரதி தெரிவித்தார்.
திருமுருகண்டிப் பிள்ளையார் ஆலயம் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. அதற்கு முன்பாக பழைய முறிகண்டியிலேயே இந்த ஆலயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முறிகண்டிப்பிள்ளையாரின் ஆதியிடமாக இந்த இடத்தை மக்கள் கொண்டாடி வந்தனர்.
அண்மையில் இலங்கை மின்சார சபையைச் சேர்ந்த வாகன சாரதி வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த பொழுது உறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பழைய முறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்துடன் மோதியது. இதில் ஆலயம் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
பன்னெடுங்காலப் பழமை மிகுந்த ஆலயம் சிதைக்கப்ப்ட்டிருப்பதாக மக்கள் தெரிவித்த பொழுதும் ஆலயத்தை சிதைத்தவர்கள் அதை புனரமைப்புச் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments