Latest News

August 12, 2013

நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் -சிங்கப்பூரின் முதல் பிரதமர்
by admin - 0

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி என்றும்
அவரை திருத்தவே முடியாது என்றும் சிங்கப்பூரின் நவீன சிற்பி என
வர்ணிக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய
பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ தெரிவித்துள்ளார். லீ குவான்
யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் லோஸ்
ஏஞ்சலெஸை சேர்ந்த பேராசிரியர் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில்தான் ராஜபக்ச குறித்து லீ குவான் யூ இதனைக்
கூறியுள்ளார். இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும்,
சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக
இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம்
என பெரும்பான்மையான சிங்களவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும்
அவர்களுக்கு நிச்சயம் இல்லை ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்றும் அவர்
தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப்
போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்

« PREV
NEXT »

No comments