இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தமது தலைவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு இந்திய மக்களுக்கு ஜனநாயக
உரிமை இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மக்கள் ஏற்கனவே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் என்றாலும் இந்திய அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை. இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்த வேண்டியதன் அவசியம், இலங்கை தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களுக்கும் இருக்கிறது என்றர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக செயலாளர் வைகோ உட்பட தமிழக அரசியல்வாதிகள் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பதை இந்திய அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை. இதனிடையே பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய
தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக அடுத்த சில தினங்களில் இலங்கையின் பிரதிநிதியொருவர் இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.
No comments
Post a Comment