பாடல்களுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரம் ஆலய
நிர்வாகத்துக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கவிஞர் புதுவை ரட்ணதுறை 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினரால்
கைது செய்யப்பட்டு, வன்னி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் பல பாடல்களுக்கு அவர் வரிகளை எழுதி இருந்தார். எனினும் தற்போது அவர் எங்கு உள்ளார் என்ற தகவல்கள் எவையும் தெரியவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் தமிழ் நாட்டுக்கு அகதியாக சென்ற போது,
கியு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் உண்மையான தகவல்கள் எவையும் பின்னர் வெளியாவில்லை. இந்த நிலையில் அவர் எழுதிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானே போன்ற பாடல்களை இனி எந்த
தருணத்திலும் பயன்படுத்த வேண்டாம் என்று இராணுவம் எச்சரித்துள்ளது.
No comments
Post a Comment