Latest News

August 05, 2013

வெலிவேரிய சம்பவம்: மூன்றாவது நபரும் உயிரிழப்பு
by admin - 0

ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதியன்று வெலிவேரிய நகர மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூன்றாவது நபரும் இன்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 29 வயதுடைய ஆண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி மாலை 5 மணியளவில் போராட்டம் நடத்திய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஏற்கனவே 17 வயதுடைய இளைஞன் பலியானதுடன் பலர் காயமடைந்தனர். 

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்றிரவு 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு இன்று காலை இன்னும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
« PREV
NEXT »

No comments