கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி மாலை 5 மணியளவில் போராட்டம் நடத்திய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஏற்கனவே 17 வயதுடைய இளைஞன் பலியானதுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தில் கழிவுநீரைக் கொட்டுகின்ற தொழிற்சாலை ஒன்றை மூடிவிடுமாறு கொழும்பு கண்டி வீதியில் பெலும்மஹர என்ற இடத்தில் கடந்த ஒரு வாரமாகவே போராட்டம் நடந்து வந்துள்ளது. அந்தப் போராட்டம் பொலிசாரால் அடக்கப்பட்ட நிலையிலேயே, அது வெலிவேரிய பகுதியில் பெரும் கலவரமாக மாறி படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
No comments
Post a Comment