இடிந்தகரையில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வாழும் பகுதிக்கு பிரபாகரன் நகர் என்று பெயர்சூட்டப்பட்டிருப்பதாக கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை சண்டாள ஜாதிகள், சங்கர ஜாதிகள் என்ற பெயர்களில் இந்து மதத்திலிருந்து விலக்கி வைத்து, அவர்கள் வாழ்விடங்களையும் தனிமைப்படுத்தியது மனுதர்மம்.
இதனால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிராமங்கள் 'ஊர்' என்றும், 'சேரி' என்றும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.
இடிந்தகரையில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வாழும் பகுதியை 'பிரபாகரன் நகர்' என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment