Latest News

August 16, 2013

மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் : ஐ.தே.க.மங்கள சமரவீர
by admin - 0

மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை எமது போராட்டம் தொடரும். எனவே இந்த ஆட்சிக்கு எதிரான அனைவரும் கட்சி பேதம் இன்றி ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்தார்.

ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் இடம்பெறும் மக்கள் விரோத மற்றும் பாஸிச ஆட்சியை கலைப்பதற்கு மக்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து அரசுக்கு எதிராக போராடு ஒன்றிணைய வேண்டும்.
கடந்த புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டம் வெற்றியளித்துள்ள நிலையில் இராண்டாவது எதிர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளோம்.

இது குறித்து நாம் ஆளும் கட்சியில் உள்ள சிலருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். எனவே அனைத்து எதிர்க் கட்சிகளும் இணைந்து ஒரு அணியில் போராட எண்ணியுள்ளோம்.
எனவே அனைத்து மக்களும் வீடுகளுக்குள் இருந்து பார்த்துக்கொண்டிருக்காது போராட ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments