இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்துள்ள நான், யாரையும் எதனையும் விமர்சிக்க வருகைதரவில்லை ஆனால், மனித உரிமைகளில் கவனம் செலுத்துவேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையின் கொழும்பு அலுவலக பிரதிநிதிகளை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சந்தித்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் ஒருவார காலத்திற்கு மட்டுமே நான் தங்கியிருப்பேன். அக்காலப்பகுதியில்
வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவிருப்பதுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக
பிரதிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment