ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித
உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை,
இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென
ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு கோரியுள்ளது.
இன்றைய தினம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள
நிலையில் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட
பல்வேறு தரப்பினரை நவனீதம்பிள்ளை சந்திக்க உள்ளார். ஊடகவியலாளர்களையும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தி வருவதாக குறித்த ஊடக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சுதந்திர ஊடகத்துறையின் அவசியம் எழுந்துள்ளதாகவும், அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் மனித உரிமை விவகாரங்களில் பாதிப்பு ஏற்படக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment