தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த நான்கு விரிவுரையாளர்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடாத்தப்படும் என இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்சனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் நடைபெறும் தமிழ் மொழி கருத்தரங்களில் பங்கேற்கச் செல்வதாகக் கூறி இந்த நான்கு விரிவுரையாளர்களும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலை புலி ஆதரவு பிரிவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக உறுதி செய்யப்பட்டால் விரிவுரையாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் க்சனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
யாழ், ஊவா மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூவரே புலி ஆதரவு பிரிவு கருத்தரங்கில் பங்குபற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் பங்குபற்ற நான்கு சிரேஸ்ட விரிவுரையாளர்கள் லண்டன் சென்றுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment