Latest News

August 16, 2013

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காணாமல்போனோர் குறித்து விசாரணை நடத்த மூவர் கொண்ட ஆணைக் குழு
by admin - 0

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது. ஆனால் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சில குழுக்களினால் முன்வைக்கப்பட்டுவருவதனால் அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மூவர் கொண்ட ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மாறாக இந்த நியமனத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்துக்கும் அல்லது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இலங்கயிைல் நடைபெறுகின்ற விடயத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தக் குழுவில் பராக்கிரம பரன்னகம மனோ ராமநாதன் மற்றும் பிரியந்தி சுரஞ்னா வித்தயாரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவானது நியமிக்க்பபட்ட தினத்திலிருந்து ஆறு மாத காலத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டியது அவசியமாகும். விசாரணை நடத்தும் முறைமை மற்றும் சாட்சிகளை பெறும் விதங்கள் குறித்து இந்தக்குழு தீர்மானிக்கும். அதாவது கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை போன்று இதன் செயற்பாடுகள் அமையலாம். விரிவான அறிக்கை ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது. காரணம் அக்காலப் பகுதியில் அங்கு சட்டம் இருக்கவில்லை. மாறாக பயங்கரவாதமே இருந்தது.
ஆனால் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சில குழுக்களினால் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனவே அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மூவர் கொண்ட ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கேள்வி முழு நாட்டினதும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா?
பதில் இல்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்கள் குறித்தே விசாரரணை செய்யப்படும். குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் சமப்வங்கள் குறித்தே விசாரணை நடத்தப்படும்.
கேள்வி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் மற்றும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இலங்கையிைல் நடைபெறுகின்றமை ஆகியவையே இந்த நியமனத்தக்கு காாரணம் என்று கூறப்படுகின்றதே?
பதில் அவ்வாறு எதுவும் இல்லை. அவற்றுக்கும் இந்த நியமனத்துக்கும் தொடர்பில்லை. ஊடகங்கள் பலவற்றையும் கூறும். அரசாங்கம் எதனை செய்தாலும் அதனை குறைகூறுவதற்கு ஒரு பிரிவினர் உள்ளனர். ஆணைக்குழுவை நியமித்தாலும் எதனையாவது கூறுவார்கள். அறிக்கை வெளியிடப்பட்டதும் எதனையாவது கூறுவார்கள். குறிப்பாக நவநீதம் பிள்ளையை நாங்களே இங்கு வருமாறு அழைத்தோம்.
கேள்வி வெலிவேரிய சம்பவம் குறித்து?
பதில் சம்மந்தப்பட்ட மக்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தினார். விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு விரைவில் தனது அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கும். அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு ஜனாதிபதி உதவி வழங்கியதாக கூறப்படுகின்றதே?
பதில் இது நகைச்சுவையான விடயமாகும். இந்த திரைப்படம் பிரபாகரனை வீரனாக காட்டாததன் காரணமாக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்
« PREV
NEXT »

No comments