Latest News

August 16, 2013

அவுஸ்திரேலியாவுக்கான ஆட்கடத்தல் வர்த்தகத்தின் பிரதான நபர் நாமல் ராஜபக்ஷ - சிங்கள இணையத்தளம் செய்தி
by admin - 0

இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் வர்த்தகத்தின் பிரதான நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்று அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் ராஜபக்ஷ மாஃபியாக்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற தகவலுடன் அந்த இணையத்தளம் ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியை அடுத்து, அவுஸ்திரேலிய அரசு இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த சிலரை அந்த நாட்டு அதிகாரிகள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த முயற்சித்த போது, அவர்களில் இருந்த சிதரன் என்ற நபர் இலங்கைக்கு திரும்பிச் செல்வதை நிராகரித்ததுடன் கூரிய ஆயுதம் ஒன்றினால் தனது கையை அறுத்து கொண்டார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அந்த இணையத்தளத்தின் செய்தியாளர் அவரை சந்தித்து பேசியுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தாம் தங்காலை பிரதேசத்தில் விடுதியொன்றில் தங்கியிருந்த படகொன்றில் ஏறியதாகவும் படகில் ஏறுவதற்கு முன்னர் தாமும் ஏனைய நபர்களும் தலா 10 லட்சம் ரூபாவை செலுத்தியதாகவும் சிதரன் கூறியுள்ளர்.
அந்த பணத்தை எடுத்துச் செல்ல அன்றைய தினம் இரவு நாமல் ராஜபக்ஷ அங்கு வந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படகில் செல்ல தயாராக இருந்தவர்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ பாதுகாப்பு தொடர்பிலும் உறுதிமொழியை வழங்கியுள்ளார். பின்னர் இலங்கை கடல் எல்லையை தாண்டி செல்லும் வரை கடற்படை படகொன்று பாதுகாப்பு வழங்கியுள்ளது.
நாமல் ராஜபக்ஷ தமது சகோதரரும் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் இணைந்து இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு கடற்படைத் தளபதியும் உதவி வருகிறார் என்ற தகவலை தாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து குற்றச்சாட்டில் இருந்து தப்புவதற்காக சட்டவிரோத ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து, நான்கு கடற்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கடற்படையின் சமிக்ஞை பிரிவை சேர்ந்த மூன்று பேரும், சிவில் பிரிவை சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர். இவர்களை மாத்தறை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த கைதானது உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்காக நடத்தப்படும் கண்கட்டி வித்தை போன்ற பொலிஸ் நாடகம் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments