Latest News

August 16, 2013

கச்சதீவில் இந்திய கொடியேற்றச் சென்ற 69பேர் கைது
by admin - 0

கச்சதீவில் இந்திய தேசிய கொடியை ஏற்றச் சென்ற தேவர் தேசியப் பேரவையைச் சேர்ந்த 69பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு நேற்று வியாழக்கிழமை கூடினர். சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கச்சத்தீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து, கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்த பின்னர் மாலையில் விடுவித்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
« PREV
NEXT »

No comments