Latest News

August 08, 2013

த.தே.கூ. மக்களின் நலன்களில் கண்ணும் கருத்துமாக இருக்கும் - பொன் செல்வராசா எம்.பி.
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எப்­போதும் எடுத்த காரி­ய­த்தை பலத்த சவால்­க­ளுக்கு மத்­தியில் நடத்தி முடிக்கும். மக்­களின் பிர­தி­நி­தி­யா­கிய நாங்கள் மக்கள் நலன்­களில் கண்ணும் கருத்­து­மாக இருப்போம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன் செல்­வ­ராசா தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற கவ­ன­ஈர்ப்பு பேர­ணியின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,
இரா­ணு­வத்­தினர் மாங்­காடு மற்றும் குருக்கள் மடம் வீடு­க­ளுக்குச் சென்று பேர­ணியில் கலந்து கொள்ளக் கூடாது என்­ற­துடன் அப்­படிச் சென்றால் கம்­பஹா நீர்ப் பிரச்­சி­னையில் நடை­பெற்ற நிகழ்வே நடக்கும் என மக்­களை அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.

இதனால் பங்­கு­கொள்­ள­வி­ருந்த அதி­க­மானோர் கலந்து கொள்­ள­வில்லை. இருந்தும் இங்­குள்ள மக்­களை வைத்து பேர­ணியை நடத்­தி­யுள்ளோம். இது எமக்கு வெற்­றியே.

நாம் அர­சுக்கோ அல்­லது பொலி­ஸா­ருக்கோ எதி­ராக பேரணி நடத்­த­வில்லை. கோவிலை சேதப்­ப­டுத்தி களவு செய்­த­வர்­களைக் கண்­டு­பி­டித்து சட்­டத்தின் முன் நிறுத்­துங்கள் என்று தான் இந்த அமைதிப் பேர­ணியை பொலி­ஸாரின் அனு­ம­தி­யுடன் நடத்த திட்­ட­மிட்­டி­ருந்தோம்.

இருப்­பினும் இதில் இரா­ணு­வத்­தினர் தலையிடுவதை பார்க்கும் போது இராணுவத்தினர் தானா இக்களவுகளைச் செய்தார்கள் எனத் தோன்றுகின்றது என்றார்.
« PREV
NEXT »

No comments