13ஆம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற `டெசோ’ மாநாட்டின் தீர்மானங்களை வலியுறுத்தி தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கித் தரவேண்டும் என தி.மு.க.தலைவர் கருணாநிதி அனைவரையும் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கை யில்,
``13 ஆம் திருத்தம் இல ங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும், இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதே தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்றும் `டெசோ’ வலியுறுத்துகிறது.
மேலும், இலங்கையில் இடம்பெறவு ள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு சிறந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதையும் பெயர் பலகைகள் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மாற்றப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் இடம்பெற்றிருந்த டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த 4 தீர்மானங்களை வலியுறுத்தித் தான் நாளைய தினம் (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக்கித் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment