Latest News

August 09, 2013

தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை.
by admin - 0

விஜய்யின் தலைவா திரைப்படம் சில நிபந்தனைகளுடன் வரி விலக்கு சான்று பெற்று,இன்று   வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. படத்துக்காக முன்பதிவு செ்த ரசிகர்களுக்கு பணத்தைத் திரும்பத் தருகின்றன திரையரங்குகள். ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் நடித்த தலைவா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தியேட்டர் லிஸ்டும் வெளியான பிறகு படத்துக்கு முட்டுக்கட்டைகள் விழுந்தன. வரிவிலக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. அடுத்து படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால், தியட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என போலீசார் கூறிவிட்டனர். இதனால் படத்தை வெளியிடுவதிலிருந்து தமிழக தியேட்டர்கள் பின்வாங்கின. தமிழக அரசின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே வெளியிடுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறின. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து நிலைமையை விளக்க விஜய்யும் எஸ்ஏ சந்திரசேகரும் கொட நாடு சென்றனர். ஆனா் அவர்களைச் சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே, தலைவா திரைப்படத்தை ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் வரிவிலக்கு கமிட்டியும், அரசு அதிகாரிகளும் பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சில நிபந்தனைகளுடன் தலைவா திரைப்படத்தை வெளியிட மேலிடத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டதாகக் கூற்பட்டது. படத்தின் நீளமும் 2.40 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கசிந்தன. ரிலீஸ் இல்லை இந்த நிலையில் தலைவா படம் இன்று  வெளியாகாது என திரையரங்குகள் அறிவித்துவிட்டன. தலைவா ரிலீஸை ஒட்டி தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்ட பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன. பணம் வாபஸ் இந்தப் படத்துக்கு சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன (நேற்றுதான் அவை நிறுத்தப்பட்டன). இதில் ஆன்லைன் மற்றும் நேரில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை வாபஸ் தர ஆரம்பித்துள்ளன தியேட்டர்கள். ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து திரும்பத் தரப்படும் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து கமலா சினிமாஸில் விசாரித்தபோது, படம் இன்று  வெளியாகாது. எப்போது வெளயாகும் என்பதை காலையில்தான் சொல்ல முடியும். இப்போது ரீபண்ட் தர ஆரம்பித்துள்ளோம் என்றனர். மாயாஜால் உள்ளிட்ட மல்டிப்ளெக்ஸ் நிர்வாகிகளும் இதே பதிலைத்தான் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments