Latest News

August 09, 2013

ஈழம் என்ற கோட்பாட்டை இந்தியா விரும்பாது
by admin - 0

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இவ்வாறான வழிமுறையை கையாளும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளன. 

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டை இந்திய பகிஷ்கரிக்க
வேண்டும் என்ற அழுத்தங்களை கொடுக்க இந்த அமைப்புகள் தமிழக அரசியல் கட்சிகளை பயன்படுத்தி வருகின்றன. முக்கியமாக பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயற்படும் புலம்பெயர் தமிழ்
அமைப்புகள் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை கட்டியெழுப்ப
முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இவர்களில் முன்னணியில் இருக்கின்றார். இதற்கு நிகரான நிலைப்பாட்டை கொண்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் வீ. ரவிகுமார்,
இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவைின் தலையீட்டின் முக்கியத்துவத்தை புலம்பெயர் அமைப்புகள் உணர்ந்துள்ளதாக குறித்த இந்தியா ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்தியா அரசுடன் மேற்கொண்ட முனைப்புகள் தமக்கு பாதகமாக அமைந்தது என அவர் கூறியுள்ளார். இந்தியா பிராந்தியத்தில் வல்லரசு நாடுகள் என்பதால் அதனை தவிர்த்து விடமுடியாது என்பது உண்மையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை என்பன 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் வலுவான யோசனையை ஒன்றை நிறைவேற்றுவதற்காக இந்தியா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற யோசனை இவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனையாகும். 

அதேவேளை இந்தியா அரசு நடு நிலையான புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் அனுகூலமாக அமையக் கூடும் என ஆசிய கல்வியியல் மத்திய நிலையத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். எனினும் அவர்களின் ஈழம் என்ற கோட்பாட்டை இந்தியா விரும்பாது எனவும் அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments