Latest News

August 09, 2013

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிக்கை !
by admin - 0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவiணியின் பாராளுமன்றப் பணிக்காலம் எதிர்வரும் 2013-ஒக்டோபர் 1ம் நாளுடன் நிறைவுக்கு வருகிற நிலையில் இரண்டாம் தவணைக்காலத்துக்கான தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தினால் (08-08-2013) வெளியிடப்பட்டுள்ளது.

ஓக்ரோபர் 26ம் நாள் சனிக்கிழமை புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ள இத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டணையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம் 2013-ஒக்டோபர் மாதம் 1ம் திகதிஇ செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஒக்டோபர் 2ம் நாள் புதன்கிழமை முதல் ஒக்டோபர் 8ம் நாள் செவ்வாய்க்கிழமை வரை தாக்கல் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் ஒக்டோபர் 10ம் நாள் வியாழக்கிழமை வெளியிடப்படும் எனவும் வேட்பாளர்மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12ம் நாள் சனிக்கிழமையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை வெளிப்படையாகவும் உண்மைத் தன்மையுடனும் நடாத்த வேண்டிய எமது பொறுப்பைச் சீராகச் செய்து முடிப்பதற்குத் தமிழர்களாகிய உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பும் உறுதுணையும் வேண்டி நிற்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் செ. ஸ்ரீதாஸ் அவர்கள் கோரியுள்ளார்.

இத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையகத்தின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்குரிய தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை உலகளாவியரீதியில்இ தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளாகஇ நாடுகடந்த தமிழீழ அரசினது யாப்பில் இனங்காணப்பட்டுள்ள அனைத்து நாடுகளிலும் நடைபெறும்.

தேர்தல் உலகளாவியரீதியில் ஒரே நாளில் நடைபெறுவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒரு நாட்டில் வேறு பகுதிகளில் இரு வேறு நாட்களில் தேர்தல் நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம்; இருப்பதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தினால் தீர்மானிக்கப்பட்டால் தேர்தல் தொடர்ந்து வரும் இரு நாட்களில் நடைபெறும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம் 2013-ஒக்டோபர் மாதம் 1ம் திகதிஇ செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டவுள்ள நிலையில் வேட்புமனு ஒக்டோபர் 2 ஆம் திகதிஇ புதன்கிழமை கோரப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையாகும். வேட்பாளர் பட்டியல் ஒக்டோபர் 10 ஆம் திகதிஇ வியாழக்கிழமை வெளியிடப்படும். வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12 ஆம் திகதி சனிக்கிழமையகும்.

முக்கிய திகதிகள் கீழே பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன:
1. பாராளுமன்றம் கலைப்பு ஒக்டோபர் 01இ 2013
2. வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02இ 2013
3. வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 08இ 2013
4. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள் ஒக்டோபர் 10இ 2013
5. வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12இ 2013
6. பொதுத் தேர்தல் ஒக்டோபர் 26இ 2013

தேர்தல் தொடர்பான அறிவித்தல் ஊடகங்கள் வாயிலாக தொடர்சியாக தெரியப்படுத்தப்பட்டு வரும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளர்; செ. ஸ்ரீதாஸ் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments