தமிழர்கள் என்பதற்காகவே வடக்கில் இடம்பெற்ற வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் தெற்கில் சிங்கள மக்கள் கண்டுகொள்ளவோ கண்டிக்கவோ இல்லை. அவர்களும் இலங்கையர்கள் தானே என்று நினைத்து குரல் கொடுத்திருந்தால் இன்று இராணுவம் சிங்கள மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்காது. தற்போதைய ஆளும் கட்சி இலங்கையை சர்வதேசம் முன்னிலையில் மானபங்கப்படுத்தியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. வெலிவேரிய மக்களை இராணுவம் தான் சுட்டுக் கொன்றது என்ற களங்கத்தை ஒரு போதும் அழிக்க முடியாது மாவிலாறு பிரச்சினை தொடர்பில் குரல் கொடுத்து யுத்தத்தை தூண்டி விட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இன்று மெளனமாக இருக்கின்றமை வேடிக்கையாக உள்ளது. இது போன்று குற்றத்தை ஒப்புக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்காது பிரச்சினையை திசை திருப்ப தகுதியற்றவாறு போலி ஆதாரங்களைக் கூறும் இராணுவப் பேச்சாளர் சீருடையை கழட்டிவிட்டு வீட்டிற்கு செல்லவேண்டும். மறுபுறம் ஜனாதிபதி நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராஜகிரியவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக கூறுகையில்,
பொது மக்களுக்கே எதிரானது தற்போதைய ஆளும் கட்சியின் ஆட்சி என்பதை அனைத்து இன மக்களுக்கும் வெலிவேரிய சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. குடிநீர் கேட்ட மக்களுக்கு இராணுவத்தை அனுப்பி பொல்லுகளால் தாக்கி சுட்டுக்கொன்று தனது கொடூர தன்மையை அரசு வெளிப்படுத்தியுள்ளது. இதனால் வயோதிபர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு இளைஞன் உட்பட இரண்டு மாணவர்கள் இராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளனர்.
இதில் மிகவும் மோசமான நிலைமை என்னவென்றால் நேற்று உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவனும் பலியானது தான். பொது மக்களின் அமைதியான ஜனநாயக போராட்டங்களில் தாக்குதல்களை நடத்தி வன்முறையை தோற்றுவிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தனியார் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சிலாபத்தில் எரிப்பொருள் விலையேற்றத்தை கண்டித்து போராட்டம் நடத்தியபோதும் மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெலிவேரிய மக்கள் குடிநீர் பிரச்சினையை சுட்டிக்காட்டி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் அதனை அரசு கண்டு கொள்ளாத நிலையில் குறிப்பிட்ட தினம் இராணுவத்தை அனுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை மோசமாக தாக்கி சுட்டுக் கொண்டுள்ளது. அன்று மாவிலாற்றில் தண்ணீரை மையமாக வைத்துக் குரல் கொடுத்த ஜாதிக ஹெல உறுமய போன்றவர்கள் தற்போது மெளனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது.
நாட்டில் சட்ட ஆட்சி வீழ்ச்சிக் கண்டு சமூக பொருளாதார பிரச்சினைகள் மேலோங்கியுள்ளது. சர்வதேசத்தின் முன் இலங்கையின் கெளரவம் பாதிக்கப்பட்டு பெரும் அவமானமே ஏற்பட்டுள்ளது என்றார்.
நிரோஷன் பாதுக்க இங்கு கருத்து தெரிவித்த மேல்மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க, ஹிட்லரின் கொள்கைகள் இன்று மஹிந்த சிந்தனை ஊடாக வெளிப்பட்டு வருகின்றது. வடக்கில் தமது மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகையில் அதனை தெற்கில் வாழும் சிங்கள மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். அதே போன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுகையில் அதனையும் வேடிக்கை பார்த்தார்கள் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டபோதும் வேடிக்கை பார்த்தார்கள்
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இராணுவம் சிங்கள மக்களையே சுட்டுக் கொல்கின்ற அளவிற்கு மோசமாகியுள்ளது. வெலிவேரிய மக்கள் கடந்த கால யுத்தத்தின் போது இராணுவத்திற்காக இரத்த தானம் செய்தனர். இரவு பகலாக பிரித் ஓதினார்கள் அவற்றையெல்லாம் மறந்து மிகவும் கொடூரமாக அரசாங்கமும் இராணுவமும் நடந்து கொள்கின்றன. எனவே பொது மக்கள் இனியும் பொறுக்கக் கூடாது எதிர்வரும் தேர்தலில் சிறந்த பதிலடியைக் கொடுத்து ஜனநாயகத்திற்காக ஆட்சியை மாற்ற வேண்டும் என்றா
No comments
Post a Comment