Latest News

August 06, 2013

உத்தரவு போட்டது கோத்தபாய
by admin - 0

சுத்தமான குடிநீர் தேவை என்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்கள் என்ற செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஸ்தலத்திலேயே 3 பேர் கொல்லப்பட்டாலும், கோட்டபாயவின் உத்தரவின் பேரில் ஒருவரே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறந்துபோன மற்றைய இருவரையும் தொடர்ந்து வைத்தியசாலையில் வைத்திருந்துவிட்டு, பின்னர் (அதாவது 48 மணி நேரம் கழித்து) அவர்கள் இறந்துவிட்டதாக பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளார்கள். இந்த நாடகத்தை இலங்கையில் உள்ள பல மீடியாக்கள் அறிந்திருந்தும் அவர்கள் அது தொடர்பாக எதனையும் பெரிதாக வெளியிடவில்லை... ஆனால் இலங்கை இராணுவம் மற்றைய 2 வரையும் எவ்வாறு சுட்டார்கள் ? எங்கே வைத்துச் சுட்டார்கள் ? கைகளை உயர்த்திய பின்னரே சுட்டார்கள் ? என்று தடாலடியாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ஒருவர்.... BBC யின் சர்வதேசப் பிரிவினருக்கே சிங்களவர் ஒருவர் மேற்கண்டவாறு செய்தி ஒன்றை வழங்கியுள்ளார். தாம் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவேளை அங்கே வந்த பொலிசார் தம்மை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் , அங்கேயிருந்த சிலர் அக் குண்டுகளை பொலிசார் மீது வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே அங்கே வந்த இராணுவத்தினர் சிலர் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், மேலும் சிலர் மக்களை நோக்கிச் சுட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சில இளைஞர்களை அவர்கள் துரத்தியும் சென்றுள்ளார்கள். குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் அருகில் உள்ள செயின்ட் அன்ரனிஸ் என்னும் தேவாலயத்தினுள் புகுந்துள்ளார்கள். ஆனால் அவர்களைப் பிந்தொடர்ந்து ஓடிவந்த இராணுவத்தினர் அவர்களைப் பார்த்து கைகளை உயர்த்துமாறு கூறியுள்ளார்கள். இவ்வாறு கைகளை உயர்த்திய இளைஞன் ஒருவரையே இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அங்கேயிருந்த அனைத்து இளைஞர்களையும் மற்றும் தன்னையும் இராணுவம் கடுமையாகத் தாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். துப்பாகியின் பின் பக்கத்தால் தமது முகத்தை தாக்கிய இராணுவம் பூட்ஸ் கால்களால் தமது கால்களில் உதைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியோடு கைகளை உயர்த்தியவண்ணம் சென்ற புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோரை சுட்டது இலங்கை இராணுவம். மற்றும் கைகளை தூக்கிச் சரணடைந்த புலிகள் உறுப்பினர்களின் கண்களையும் கைகளையும் கட்டி, அவர்கள் பிடரியில் சுட்டதும் இலங்கை இராணுவமே. தற்போது நடைபெற்றிருக்கும் கொலைகளைப் பார்த்தாவது, சிங்களவர்கள் தமது இராணுவத்தைப் பற்றி புரிந்துகொள்வார்கள். இலங்கையில் ஏன் இணப்பிரச்சனை ஆரம்பமானது ? ஏன் தேசிய தலைவர் கைகளில் துப்பாக்கியை ஏந்தினார் என்பதும் தற்போது மீண்டும் ஒருமுறை புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. (வீடியோ இணைப்பு)
« PREV
NEXT »

No comments