சமூக நலனில் ஈடுபடுவோர் நல்ல நீதிபதிகளாகி விட முடியாது. இதேவேளை நல்ல நீதிபதிகள் அரசியல் வாதிகளாக இருக்க முடியாது. அரசியலுக்குள் நுழையும் எந்த நீதிபதியும் கீர்த்தியுள்ள
நீதிபதியாக இருந்திருக்க முடியாது. அவ்வாறே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர்
சி.வி.விக்னேஸ்வரனும் காணப்படுகின்றார் என வீடமைப்பு, பொறியியல் கட்டுமானம் மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்
போதே அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார். சமூக சேவையில் ஈடுப்படுபவர்களே அரசியலுக்கு வருவார்கள். ஆனால்
சட்டத்தை படித்தவர்களோ நீதியரசர்களோ அரசியலுக்குள் வரமுடியாது. நீதிபதி ஒருவர்
தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்
நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளிலோ அல்லது வேறு எங்காவது தொலைவிலேயோ குடியேறி வாழவேண்டும்.
இல்லையென்றால் அவர்களின் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களால் பிரச்சினைகளுக்கு உள்ளாகுவர். ஆனால் இவ்வாறு இல்லாமல் அரசியலுக்குள் நுழையும் நீதியரசர் ஒருவர் உண்மையான நீதியரசராக
இருந்திருக்க முடியாது. அவ்வாறு ஒருவர் அரசியலுக்குள் வருவாரெனின் அரசியல் அமைப்பில்
உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்து அதன் ஊடாக மாயா ஜாலங்களை காட்டி தனி ஈழம் அமைத்து விடுவார். யுத்தத்தால் பெறமுடியாத ஒன்றை அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகள் மூலம் முன்னாள்
உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை வைத்து சாதித்துகொள்ள முற்படுகின்றனர். எனவே நாட்டு மக்கள் இதற்கு இடமளிக்காமல்
ஐ.ம.சு.கூட்டமைப்பிற்கு வாக்களித்து நாடு துண்டாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றார்.
No comments
Post a Comment