Latest News

August 06, 2013

கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்வதற்கு சகல தமிழ் இளைஞர்களும் உழைக்கவேண்டும்-சுகிர்தன்
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை வெற்­றி­ய­டையச் செய்­வதன் ஊடாக எமது பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்­ய­மு­டியும். இந்த வெற்­றி­யினை இல­கு­வாகப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அனைத்து இளைஞர், யுவ­தி­களும் ஒன்­றி­ணைந்து உழைக்க முன்­வ­ர­வேண்டும். அதேபோல் சகல தமிழ் மக்­களும் இத்­தேர்­தலில் வாக்­க­ளிக்க முன்­வ­ர­வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் சந்­தி­ர­லிங்கம் சுகிர்தன் தெரி­வித்தார்.
வட­மா­காண சபைத் தேர்தல் தொடர்­பாகக் கருத்துத் தெரி­விக்கும் பொழுதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்:–
வட­மா­காண சபைத் தேர்­தலின் ஊடாக அமைக்­கப்­ப­டு­கின்ற இப்­ப­கு­திக்­கான ஆட்­சியே இப்­ப­கு­தியின் அர­சியல் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை தீர்­மா­னிக்­க­வுள்­ளதால் தமிழ் இன விரோ­தி­க­ளுக்கும் சுய­லாப அர­சியல் வாதி­க­ளுக்கும் மக்கள் வாக்­க­ளிப்­பதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெறும் பட்­சத்தில் இப்­ப­கு­தியை முழு­மை­யாக அபி­வி­ருத்தி செய்­ய­மு­டியும்.
இத்­தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வெற்­றியை உறுதி செய்­வ­தற்­காக சகல இளை­ஞர்­களும் ஒன்­றி­ணைந்து தேர்தல் வேலை­களில் ஈடு­பட்டு வாக்­க­ளிக்க முன்­வ­ர­வேண்டும். அதேபோல் தமிழ் மக்­களும் தமது வாக்­கு­களைச் சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை வெற்றி பெறச் செய்­ய­வேண்டும்.
இத்­தேர்தல் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் முக்­கி­ய­மான ஒரு தேர்­த­லாகும்.
இதில் வெற்­றி­பெற்று தமிழ் மக்­களை ஏமாற்­று­வ­தற்­காகப் பல சக்­திகள் களத்தில் குதித்­துள்­ளன. ஆனால் மக்கள் அவர்­க­ளு­டைய கருத்­துக்­க­ளுக்குச் செவி­சாய்க்­காது எமது உரி­மை­களை வென்­றெ­டுத்து எமது பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு வாக்­க­ளிக்­க­வேண்டும்.
இத் தேர்­தலில் தமிழ் மக்கள் தமது ஒன்­று­பட்ட சக்­தியை வெளிக்­காட்­டு­வதன் ஊடாக எமது உரி­மை­களை இல­கு­வாகப் பெற்றுக் கொள்ளமுடியும். இதற்காகவே இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போட்டியிடுகின்றனர். இதனை நன்கு உணர்ந்தவர்களாக சகல தமிழ் மக்களும் இத்தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டும் என்றார்
« PREV
NEXT »

No comments