Latest News

August 02, 2013

புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைக்குமாறு மக்கள் கோரிக்கை
by admin - 0

புதுக்­கு­டி­யி­ருப்புப் பிர­தே­சத்தில் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள மக்­களின் நலன்­க­ருதி பல இலட்சம் ரூபா செலவில் அமைக்­கப்­பட்­டுள்ள பேருந்து நிலை­யத்தில் மதுப்­பி­ரி­யர்கள் அடா­வ­டித்­த­னங்­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக மக்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இது குறித்து கவலை தெரி­வித்­துள்ள இப்­ப­குதி மக்கள் குறித்த பேருந்து நிலை­யத்தை விரை­வாகத் திறப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கோரி­யுள்­ளனர்.
முல்லை மாவட்­டத்தில் இடம்­பெற்ற இறுதி யுத்­தத்­தின்­போது புதுக்­கு­டி­யி­ருப்புப் பிர­தே­சத்தில் இருந்த குறித்த பேருந்து நிலையம் பயன்­ப­டுத்த முடி­யா­த­வாறு பலத்த சேதத்­திற்­குள்­ளா­னது.
இப் பகு­தியில் நிரந்­த­ர­மான பேருந்து நிலையம் இல்­லா­த­தினால் மீள்­கு­டி­யே­றிய மக்கள் தங்கள் பய­ணங்­களை மேற்­கொள்ள முடி­யாமல் பாதிப்­ப­டைந்து வரு­கின்­றனர்.
மக்கள் நலன் கருதி பரந்தன், முல்­லைத்­தீவு வீதியில் கோம்­பாவில் கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வி­லுள்ள கைவேலி என்னும் இடத்தில் பிர­தேச செய­ல­கத்­தினால் வழங்­கப்­பட்ட ௨ ஏக்கர் காணியில் 20 இலட்சம் ரூபா செலவில் பிர­தேச சபை­யினால் பேருந்து நிலையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.
மக்­களின் தேவையைக் கருத்­திற்­கொண்டு அவ­ச­ர­மாக அமைக்­கப்­பட்ட இந்தப் பேருந்து நிலையம் மூன்று மாதங்­க­ளுக்கு மேலா­கியும் திறக்­கப்­ப­டாமல் இருப்­ப­தனால் மதுப்­பி­ரி­யர்­களின் மறை­வி­ட­மாக மாறி­யுள்­ளது. மது அருந்­து­ப­வர்கள் பேருந்து நிலை­யத்தை நாடி வந்து மது மருந்­து­வ­து­மல்­லாமல் வெற்றுப் போத்­தல்­க­ளையும் பியர் ரின்­க­ளையும் அவ்­வி­டத்தில் வீசி­விட்டு செல்­கி­றார்கள். இதனால் சுற்றுச் சூழ­லுக்­குப்­பா­திப்பு ஏற்­ப­டு­வ­துடன் சுகா­தா­ரத்­திற்கும் பங்கம் ஏற்­ப­டு­கின்­றது.
இந் நிலை குறித்துக் கவலையடைந்துள்ள மக்கள் பூர்த்தியான நிலையிலுள்ள இந்த பேருந்து நிலையத்தை விரைவாககத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments