Latest News

August 02, 2013

வேலங்­குளம் - பூவ­ர­சங்­கு­ளத்­திற்­கி­டையில் விசேட போக்­கு­வ­ரத்து வசதி தேவை-ஆனந்தன்
by admin - 0

வவு­னியா பூவ­ர­சங்­கு­ளத்தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள வாக்குச் சாவ­டியில் வாக்­க­ளிப்­ப­தற்­காக 12 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வேலங்­குளம் பிர­தே­சத்தில் இருந்து மக்கள் வர­வேண்­டி­யி­ருக்­கின்­றது.இந்தப் பகு­தியில் பொதுப் போக்­கு­வ­ரத்து வசதி கிடை­யாது. எனவே, இந்த வாக்­காளர்களுக்கு உரிய போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து கொடுக்­கப்­பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு வரக் கூடி­ய­தாக இருக்கும் என்று வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் வவு­னியா அர­சாங்க அதிபர் தலை­மை­யி­லான கூட்­டத்தில் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்;. இந்தக் கோரிக்­கையை ஏற்றுக் கொண்ட அர­சாங்க அதிபர் இந்த விடயம் குறித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று உறு­தி­ய­ளித்­தி­ருப்­ப­தாக பாராளு­மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments