இளவரசர் சார்ள்ஸ் பண்டாரநாயக்க இல்லத்தில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ள இளவரசர், பண்டாரநயாக்க இல்லத்தில் தங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொஸ்மன்ட் பிளேசில் அமைந்துள்ள பண்டாரநாயக்க இல்லத்தில் இளவரசர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய உலகத் தலைவர்களில் அநேகமானவர்கள் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். அதன்போது சினமன் கிராண்ட் மற்றம் பண்டாரநாயக்க இல்லம் ஆகியவற்றை கண்காணித்து, பண்டாரநாயக்க இல்லத்தில் தங்குவது இளவரசருக்கு உசிதமானது என தீர்மானித்துள்ளனர்.
பண்டாரநாயக்க வளவு என அழைக்கப்பட்ட இந்த பண்டாரநாயக்க இல்லத்தில் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இல்லத்தில் வைத்துதான் 1959ம் ஆண்டு பண்டாரநாயக்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியானார்.
No comments
Post a Comment