வடக்கு, கிழக்கில் காணாமல் போயுள்ளதாகக கூறப்படும் 2 ஆயிரத்து 550 பேர் தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் என். பெர்ணான்டோ இன்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பயங்கவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், காணாமல் போனவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய இரகசியமான ஆவணத்தை நீதிமன்றத்தில் கையளித்தார். அதனை நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
காணாமல் போயுள்ள 2550 பேர் தொடர்பில் விசேட விசாரணைகளை நடத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்து கொண்ட நீதவான் அதற்கான அனுமதியை வழங்கினார்.
அத்துடன் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
ஐ.நா மனித உரிமையாளரின் வருகைக்குப் பின்னர் காணாமல்போனோரை விசாரணை செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் ஏமாற்று நடவடிக்கையாகவே நோக்கப்படுமென அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment