Latest News

August 26, 2013

13வது அரசியல் அமைப்பில் குறைகளை மாற்ற இந்தியாவின் ஆலோசனை தேவை - விக்னேஸ்வரன்
by admin - 0


13வது அரசியல் அமைப்பில் பல குறைகள் உள்ளன. எனினும் அவற்றை இந்தியாவின் ஆலோசனை இன்றி மாற்ற முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்காகவே 13வது அரசியலமைப்பு தீர்வாக கொண்டு வரப்பட்டது.

அது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உடன்படிக்கையாகும்.

எனவே அதனை இந்தியாவின் ஆலோசனை இன்றி மாற்றமுடியாது என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் கட்டாயமாக அது தொடர்பில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியல் அமைப்பில் சேர்த்துக்கொள்வதற்காக தமிழர்கள் பல யோசனைகளை முன்வைத்தனர். எனினும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவேதான் அந்த அரசியல் அமைப்பில் குறைகள் ஏற்பட்டன என்று திரு.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைகளை கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள், அதனை பெரும்பான்மை சிங்களவர்கள் அறிந்துக்கொள்ளாதவிடத்து ஆச்சரியப்படுகின்றனர்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளுக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு மக்கள் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பர் என்று விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments