Latest News

August 26, 2013

முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பின் எச்சங்களை அழித்தபின் முளைத்துள்ள நீச்சல் தடாகம்!
by admin - 0

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முள்ளிவாய்க்காலுக்கு செய்யவதையடுத்து, அப்பகுதியிலுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் முகாம்கள; அவசரமாக அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கட்டச் சமர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை முற்றாக அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று ‘மினி’ இராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள், தூரப்பார்வை கண்காணிப்பு அரண்கள் (உயரமான காவலரண்) ஆகியவை அவசர அவரசரமாக அகற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே அங்கிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றிய படையினர் தற்போது முகாம்களையும் அகற்றிவருகின்றனர்.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முக்கியமாக இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வதற்குத் திட்டமிட்ட பின்னரே இத்தகைய திடீர் நடவடிக்கையில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பின் எச்சங்களை அழித்த படையினர், அப்பகுதியில் நீச்சல் தடாகம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
« PREV
NEXT »

No comments