Latest News

August 26, 2013

ஜனாதிபதி பெலாரஸுக்கு தப்பியோடக் காரணம் என்ன? - ஐ.தே.க.
by admin - 0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏன் பெலாரஸுக்கு பயணமானார் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள இறுதியான சர்வாதிகாரம் பொருந்திய நாடு பெலாரஸ் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஜனாதிபதி ஏன் அங்கு விஜயத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்திருக்கும் போது அவரை சந்திக்காமல் பெலாரஸுக்கு விஜயத்தை மேற்கொண்டமையானது தவறாகும்.
« PREV
NEXT »

No comments