Latest News

August 11, 2013

வடமாகாண சபைத் தேர்தல் ஓர் கண்ணோட்டம்
by admin - 0

ஐந்து மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்ட வடக்கு மாகாண சபையில் 36 அங்­கத்­த­வர்­களில் 30 அங்­கத்­த­வர்­க­ளை­யா­வது தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு பெற்று சாதனை புரிந்து காட்ட வேணு­மென கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சூளுரைத்­துள்ளார். தேர்தல் நடாத்தப்படும் 3 மாகாண சபை­க­ளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். குறிப்பாக வடக்கு மாகாண சபையைக் ­கைப்பற்றுவோமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்­கூட்டமைப்பின் மூத்த அமைச்­சர்கள் நம்­பிக்கை தெரி­விக்­கின்­றார்கள்.

எமது மக்­களின் மிகப் பெரிய ஆத­ர­வுடன் வட­மா­காண சபையில் ஆட்சி அமைப்­போ­மென ஈ.பி.டி.பி. யின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான டக்ளஸ் தேவா­னந்­தாவும் அவ­ரது கட்­சி­யி­னரும் உறுதி கூறி வரு­கின்­றார்கள். இந்த நிலையில் 36 அங்­கத்­த­வர்­களை தெரிவு செய்­வ­தற்­கான 5 மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய வடக்கு மாகாண சபைக்கு 906 பேர் போட்­டி­யி­டு­கின்­றார்கள்.

யாழ்ப்­பாணம், வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார் ஆகிய 5 மாவட்­டங்­க­ளிலும் மொத்­த­மாக 714488 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர்.
மாவட்ட அடிப்படையில் தனித்தனியாக நோக்குவோ­மாயின் 16 உறுப்­பி­னர்கள் கொண்ட யாழ். மாவட்­டத்தில் 11 கட்­சி­க­ளையும் 9 சுயேச்­சைக்­ கு­ழுக்­க­ளையும் சேர்ந்த 380 வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர்.

1.ஸ்ரீலங்கா தொழி­லாளர் கட்சி 2.இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி 3.ஜன­ச­த­பெ­ர­முன 4.சோஷ­லிச சமத்­து­வக்­கட்சி 5.ஐக்­கிய தேசி­யக்­கட்சி 6.மக்கள் விடு­தலை முன்­னணி 7.ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பு 8.ஜன­நா­யக சுதந்­தி­ரக்­கட்சி 9.ஜன­நா­யக ஐக்­கிய முன்­னணி 10.ஐக்­கிய சோஷ­லி­சக்­கட்சி 11.ஸ்ரீ லங்கா மகா­ஜன ப­க் ஷய ஆகிய 11 கட்­சிகள் களத்தில் இறங்­கி­யுள்­ளன.

இதே­வேளை 1.அன்­ரனி ரங்­கதுசார, 2.இரா­ஜ­லிங்கம் விதுன்­ராச, 3.ர.திரி­லோ­க­நாதன், 4.பொ.விஜ­யகாந்த், 5.ஜனூன் முஹம் மட், 6.இ.தாமோ­தரம் ராஜா, 7.மாணிக்­க­சோதி அபி­மன்­ன­சிங்கம், 8.செல்வி தம்­பிப்­பிள்ளை 9.கிருஷ்­ண­சாமி சுபாஸ்­கரன் ஆகியோர் தலை­மையில் 9 சுயேச்­சைக்­கு­ழுக்கள் யாழ். மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­கின்­றன.

இரு­பது போட்டி நிலைகள் காணப்­படும் இம்­மா­வட்­டத்தின் வாக்­காளர் தொகை 426703 ஆகும்.
16 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். ­மாவட்­டத்தில் போட்­டி­யிடும் பிர­தான கட்சிகளின் முதன்மை வேட்­பா­ளர்­க­ளாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு நீதி­ய­ரசர் சி.வி. விக்­னேஸ்­வரன், ஈ.பி.டி.பி. முதன்மை வேட்­பாளர் எஸ். தவ­ராஜா, ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் முதன்மை வேட்­பா­ளர் இ.அங்­கஜன் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முதன்மை வேட்­பா­ள­ர் தி. துவா­ர­கேஸ்­வரன் ஆகியோர் போட்­டி­யி­டு­கின்­றனர்.
நான்கு (4) உறுப்­பி­னர்­களை தெரிவு செய்ய வேண்­டிய கிளி­நொச்சி மாவட்­டத்தில் 11கட்­சி­களும் இரண்டு சுயேச்சைக்­கு­ழுக்­களும் போட்­டி­யி­டு­கின்­றன. 91 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் இம் மாவட்­டத்தில் 68.590 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முதன் மை வேட்­பா­ள­ராக தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ. ஆனந்­தசங்­கரி, ஐக்­கிய தேசியக் கட்­சி யின் முதன்மை வேட்­பா­ள­ராக தியா­க­ராஜா விக்­னேஸ்­வரன், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் முதன்மை வேட்­பா­ள­ராக ஈ.பி.டி.பி. கட்­சியைச் சேர்ந்த வை.தவ­நாதன் ஆகியோர் போட்­டி­யி­டு­கின்­றனர்.
முல்­லைத்­தீவு மாவட்டம் 5 மாகாண சபை உறுப்­பி­னர்­களைக் கொண்­டது. இம் மாவட்­டத்தில் 52402 பேர் இம்­முறை வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். 104 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்ள இம்­மா­வட்­டத்தில் 11 கட்­சி­களும் இரண்டு 2 சுயேச்­சைக்­கு­ழுக்­களும் போட்­டி­யி­டு­கின்­றன.
இம்­மா­வட்­டத்தின் முதன்மை வேட்­பா­ளர்­க­ளாக தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பைச் சேர்ந்த கோட்­டக்­கல்வி அதி­காரி மரி­யம்­பிள்ளை அன்­ரனி ஜெக­நாதன் போட்­டி­யி­டு­கிறார்.
வவு­னி­யாவில் 94,367 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். 6 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்­டிய இம் மாவட்­டத்தில் 12 கட்­சி­க­ளையும் 07 சுயேச்­சைக்­கு­ழுக்­க­ளையும் சேர்ந்த 171 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்­றார்கள்.

தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் முதன்மை வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருப்­பவர் ஓய்வு நிலை கிராம சேவை­யாளர் எம். தியா­க­ராஜா, ஐக்­கிய மக்­கள்­ சு­தந்­திர முன்­ன­ணியின் முதன்மை வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருப்­பவர் ஸ்ரீ ரெலோவின் செய­லாளர் ப. உத­ய­ராசா ஆவார்.
மன்னார் மாவட்டம் 5 அங்­கத்­த­வர்­க­ளைக் ­கொண்­டது. இங்கு கட்­சிகள், சுயேச்­சைக்­கு­ழுக்கள் என்ற வகையில் 160 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்­றார்கள். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முதன்மை வேட்­பா­ள­ராக கலா­நிதி ஞான­சீலன், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் சார்பில் எந்­திரி ரொபேட் பீரிஸ் ஆகியோர் போட்­டி­யி­டு­கின்­றார்கள்.

தேர்தல் தொகுதி அடிப்­ப­டையில் வட­மா­கா­ணத்தை நோக்­குவோ­மாயின் தேர்தல் மாவட்­ட­மான யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி ஆகி­யன ஊர்­கா­வற்­றுறை, வட்­டுக்­கோட்டை, காங்­கே­சன்­துறை, மானிப்பாய், கோப்பாய், உடுப்­பிட்டி, பருத்­தித்­துறை, சாவ­கச்­சேரி, நல்லூர், யாழ்ப்­பாணம், கிளி­நொச்­சி­யென 11தேர்தல் தொகு­திகளைக் கொண்­டவை.

வன்னி மாவட்டம், மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு என மூன்று தேர்தல் தொகு­தி­களைக் கொண்­டது. மறு­புறம் இவை மாவட்­ட­மா­கவும் கொள்­ளப்­ப­டு­கி­றது.
ஐந்து மாவட்­டங்­க­ளிலும் போட்­டி­யிடும் கட்­சிகள், குழுக்கள் உறுப்­பினர் எண்­ணிக்கை வாக்­காளர் எண்­ணிக்கை வேட்­பாளர் எண்­ணிக்கை ஆகி­ய­வற்றை ஒரே பார்­வையில் 
நோக்­கு­வோ­மாயின்,

இவ்­வட்­ட­வ­ணையின்படி பார்க்­கின்ற போது கடந்த காலத்தில் நடை­பெற்ற எல்லா வகை­யான தேர்­தல்­க­ளையும் விட வட­மா­காண சபைத் தேர்­தலில் கட்சிகள், சுயேச்சைக்­குழுக்களின் போட்டி வீதம் கணி­ச­மா­னது என்று சொல்­வதை விட அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. 36 அங்­கத்­து­வத்தைப் பெறு­வ­தற்கு 57 கட்­சி­க­ளையும் 28 சுயேச்­சைக்­கு­ழுக்­க­ளையும் சேர்ந்த 906 பேர் வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இதில் சிறப்­பாக குறிப்பிடக்கூ­டிய விடயமன்னவென்றால் வடமாகாண சபை தேர்தலில் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஐவர் போட்­டி­யி­டு­வ­தாகும்.

1. தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பின் சார் பில் வன்னி மாவட்ட முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புளொட் அமைப்பின் தலைவரு­மா­கிய தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன்.
2. முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ரெலோ அமைப்பின் முக்­கிய உறுப்­பி­ன­ரு­மா­கிய கே.சிவா­ஜி­லிங்கம்.
3. கிளி­நொச்­சித் ­தொ­கு­தியின் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மா­கிய வீ. ஆனந்­த­சங்­கரி வன்னி மாவட்­டத்­திலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

இதே­வேளை ஈ.பி.டி.பி.யின் சார்பில்,
1. முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். தவ­ராஜா, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்­பிலும்.
2. வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ச. கன­க­ரட்ணம் இம்­முறை முல்­லைத் ­தீவு மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்­னணி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­கிறார்.

இத்­த­கை­ய­தொரு பல்­முனைப் போட்டி நிலவி வரும் வடக்கு மாகாண சபையை கைப்­பற்றப் போகும் வாக்கு வல்­லமை கொண்­ட­வர்­க­ளாக யார் இருக்கப் போகின்­றார்கள்?
ஆட்­சியைக் கைப்­பற்றும் திறனை தனி­யொரு கட்சி பெற முடி­யுமா அல்­லது கூட்டுக் கட்­சிகள் பெற முடி­யுமா என்­ப­தெல்லாம் தீவி­ர­மாக ஆரா­யப்­பட வேண்­டிய விட­ய­மா­கவே இருக்­கின்­றது
இலங்­கையில் 8 மாகாண சபை­க­ளிலும் நாமே ஆட்சி செய்து வரு­கிறோம். இதே­போல வடக்­கு­ மா­காண சபை­யிலும் நாமே ஆட்சி அமைப்போம் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் செ­ய­லா­ளரும் அமைச்சரு­மான சுசில் பிரேம்ஜயந்த யாழ்ப்பாணத்தில் வைத்து சூளு­ரைத்­துள்ளார்.

இதே­வேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் சர்­வ­தே­சத்தின் அழுத்தம் கார­ண­மாக நடை­பெறும் இத் தேர்­த­லா­னது சுதந்­தி­ர­மாக நடை­பெ­றுமா என கேள்வி எழுப்­பி­யி­ருப்­ப­துடன் சர்வதேச கண்­கா­ணிப்பா­ளர்கள் கட்­டா­ய­மாக அழைக்­கப்­பட வேண்­டு­மென வலியுறுத்தியு­முள்ளார்.

எவை எப்­ப­டி­யி­ருந்த போதிலும் இந்த தேர்­தலில் நேரடிப் போட்டித் தன்மை கொண்ட கட்­சி­க­ளாகக் காணப்­ப­டு­பவை வரிசை ஒழுங்கில் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­டணி மற்றும் ஈ.பி.டி.பி. ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­ய­ன­வாகும். இதில் மறை­மு­க­மாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் போட்டித் தன்மை சுதந்­தி­ரக்­ கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக இருக்­கப்­போ­கின்­றதே தவிர கூட்­ட­மைப்­புக்கு அல்ல.

நேரடிப் போட்­டி­யென்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் ஒன்­றை­யொன்று எதிர்­கொள்ள வேண்­டிய நேர் நிலைப் போட்டி யாழ். மாவட்­டத்­திலும் வன்னி மாவட்­டத்தில் இன்­னு­மொரு நேர்­நி­லைத் ­தன்மை கொண்­ட­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

இந்த போட்டி நிலை­க­ளைக்­கொண்டு எதை­யும்­ திட்டவட்­ட­மாக வரை­ய­றுக்க முடியா விட்­டாலும் இப்­போ­தைய சூழ்­நி­லைக்­க­ணிப்பில் அல்­லது சமூக ஆய்­வாளர் கருத்­துப்­படி முதன்மை பெற்று நிற்கும் கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு காணப்­ப­டு­கின்ற போதும் ஒரு உச்ச வெற்­றியை தாண்டக் கூடிய பெரும் வாக்குப் பலத்தை இது எங்­கி­ருந்து பெற முடி­யு­மென்­பதை ஒவ்­வொரு தேர்தல் தொகு­தி­க­ளி­லி­ருந்தே கணிப்­பிட முடியும்.

இதை ஒப்­பீட்டு ரீதியில் நோக்க வேண்­டு­மானால் எமக்கு கிடைக்கக் கூடிய அண்­மைக்­கால தர­வுகள் என்ற வகையில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி நடை­பெற்ற பொதுத் தேர்தல் தர­வு­க­ளைக்­கொண்டு நோக்­கு­வது எதிர்­கால நிகழ்வை அறிய உதவ முடியும். காரணம் பொது மக் கள் நேர­டி­யாக பங்கு கொண்ட தேசிய ரீதி­யான வாக்­க­ளிப்­பென்ற வகையில் இதுவே பொருந்தும்.

அந்த வகையில் வட­மா­கா­ணத்­தி­லுள்ள தேர்தல் மாவட்டம் என்ற அடிப்­ப­டையில் கிளி­நொச்சி உள்ள­டங்­கிய யாழ். மாவட்­டத்­தி­லுள்ள 11 தேர்தல் தொகு­தி­களின் வாக்­க­ ளிப்பு நிலை­வ­ரத்தை பிர­தான கட்­சிகள் பெற்ற தரவின் அடிப்­ப­டையில் நோக்­கு வோம்.

மேற்­காட்­டப்­பட்ட புள்ளி விப­ரங்­களின் படி யாழ். தேர்தல் மாவட்­டத்தில் 721359 பேர் வாக்­கா­ளர்­க­ளாக பதி­யப்­பட்­டி­ருந்த போதிலும் 168277 பேரே வாக்­க­ளித்­துள்­ள னர்.
அதில் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்­புக்கு 65119 பேர் வாக்­க­ளித்த நிலை காணப்­பட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு சுமார் 47622 பேர் வாக்­க­ளித்­துள்­ளனர். மூன்றாம் நிலையில் ஐக்­கிய தேசிய முன்­னணி 12621 வாக்­கு­களைப் பெற்­றுள்­ளது.

இந்த வாக்கு செலுத்தல் அடிப்­ப­டையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு 5 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 3 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய தேசிய முன்­னணி 1 ஆச­னத்­தையும் பெற்­றி­ருப்­பது கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும்.
தொகுதி வாரி­யாகப் பார்க்­கின்ற போது யாழ். மாவட்­டத்­தி­லுள்ள 11 தொகு­தி­க­ளிலும் 18.5 வீத வாக்­கு­களே அளிக்­கப்­பட்­டுள்­ளன.
அதிலும் சனச்செறிவான தேர்தல் தொகுதிகள் என்று அடை­யா­ள­மி­டப்­ப­டு­கின்ற நல்லூர், மானிப்பாய் போன்ற தேர்தல் தொகு­தி­களில் மிக மோச­மான வாக்­க­ளிப்பு நிலையே காணப்­பட்­டுள்­ளது.
இதே­போன்று வன்னி மாவட்­டத்தை எடுத்து நோக்­கு­வோ­மாயின் வாக்­க­ளிப்பு விழுக்­காடு அதி­க­மா­கவே காணப்­ப­டு­கி­றது

வன்னி மாவட்­டத்தில் பதி­யப்­பட்ட மொத்த வாக்­கு­களில் 276975 அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளாக 90367 காணப்­ப­டு­கின்­றது. இந்த அளிப்பு வாக்கில் தமிழ்த்­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு 37639 வாக்­கு­களைப் பெற்­றி­ருக்க ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 23389 வாக்­கு­களைப் பெற்­றி­ருக்­கி­றது. இதன் அடிப்­ப­டையில் தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மை ப்பு 3 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­ திர முன்­னணி 2 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய தேசிய முன்­னணி 01 ஆச­னத்­தையும் பெற்­றி­ருந்­தது.
வன்னி மாவட்­டத்தைப் பொறுத்­த­வரை வவு­னியா மாவட்டம் உயர்ந்த தன்­மையில் வாக்­க­ளிப்பு இருந்த போதி­லும்­ முல்­லைத்­தீவு, மன்னார் மாவட்­டங்­களில் மிக மோச­மான நிலையே காணப்­ப­டு­கி­றது.

இந்த மாவட்­டங்­களின் விழுக்­காட்டு நிலைக்கு பல்­வேறு கார­ணங்கள் இருந்­தி­ருக்­கி­றது.
இந்த தேர்தல் அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது மாகாண சபை தேர்தல் எத்­த­கைய மாற்­றங்­க­ளைக்­கொண்டு வரும் தத்­துவங்­களைக் கொண்­டுள்­ளது என்­பது காத்­தி­ர­மான கேள்­வி­யாக மாறக்­கூடும்.
ஒரு தேர்தல் உன்­னத வெற்­றியைத் தீர்­மா­னிப்­பதில் பல்­வேறு கார­ணிகள் முதன்மை பெற்று நிற்­கின்­றது என்­பது அர­சியல் தத்­து­வமும் வியாக்­கி­யா­ன­மு­மாகும்.
அதில் முக்­கி­ய­மா­னவை கட்­சி­களின் தூர­நோக்கு பொரு­ளா­தாரத் திட்­டங்கள், அதன் தேர்தல் விஞ்­ஞா­பனம், நிலை­மாறாக் கொள்­கைகள், தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­க­ளுக்­கான கட்­சியின் அணுகுமுறை கள், வேட்­பா­ளர்­களின் ஆளுமை என எத்­த­னையோ கார­ணிகள் கட்­சி­யொன்றின் தேர் தல் வெற்­றி­யைத்­ தீர்­மா­னிக்­கின்­றன என்­பதை அர­சியல் வல்­லுநர்கள் குறிப்­பி­டு­வார்கள்.

இவை­யெல்­லா­வற்­றுக்கு மேலாக தலை­மைத்­து­வத்தின் உயர்ந்த ஆளுமைத் தன்­மை யும் செறி­வான செல்­வாக்கை செலுத்தி நிற்­கின்­றது.
மேலே எடுத்­துக்­கூ­றப்­பட்ட ஒவ்­வொரு கார­ணியின் உரைகல் கொண்டு உரைத்துப் பார்க்க வேண்­டிய தேவை வட­மா­காண சபைத் தேர்­தலில் எழுந்து நிற்­கின்­றது. இந்த தேர்­தலைப் பொறுத்­தரை மக்­கள்­ ஆ­ணை­ யென்ற வாக்குப் பெறலை விட, சர்­வ­தே­சத்­துக்கு எடுத்­துக்­காட்­டக்­கூ­டிய ராஜ­தந்­தி ரப் போருக்­கான மக்கள் பிர­க­ட­ன­மா­கவே கொள்­ளப்­ப­டு­கி­றது.

இந்த ஜன­நா­யகப் போரில் அர­சாங்கம் தன்னை நியாயத்­த­னாக நிலை நிறுத்த முயற்­சிப்­பது ஏதோ வகையில் உண்­மையே, இரா­ணுவப் பிர­சன்­னத்­தைக் ­கு­றைத்து விட் டோம், மீள்­கு­டி­யேற்றம் நிறைவு பெற்று விட்­டது. அபத்­த­மான படு­கொ­லை­களை விசா­ரணை செய்து கொண்­டி­ருக்­கிறோம். மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களோ காணி அதி­கா­ரங்­களோ தேவை­யற்­றது. அதை வழங்க நாங்கள் தயா­ரா­க ­இல்­லை­யென்ற செய்­தி­களை வெளிப்­ப­டை­யா­கவே அரசு கூறி வரு­கின்­றது.

இதற்கு பக்கம் பாடு­கின்­ற­வர்­களும் வடக் குத் தேர்­தலில் களம் இறங்­கி­யி­ருக்­கி­றார்கள். வடக்­குக்கு எந்த அதி­கா­ரங்­களும் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என கூக்­குரல் இடும் கட்­சி­களும் பச்சைத் தன­மா­கவே வாக்­குக்­கேட்க வந்­தி­ ருக்­கி­ன்றன. இவை­யெல்­லா­வற்­றையும் பார்க்­கின்ற போது வடக்கில் ஒரு ராஜ்ஜியம் ஜனநாயக முறைப்படி அமைந்து விடுமோ என்று நாங்கள் கனவுலகில் சஞ்சரிக்க வேண் டியுள்ளது.

ஆனால், கூட்டமைப்பினரோ தமிழ் மக் களின் பிரச்சினைக்கு வடக்கு மாகாண தேர் தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ ஒரு தீர்வாக அமைந்து விடப் போவதில்லை. அது ஒரு படிக்கல்லாக அமைய முடியுமே தவிர முற்று முழுதாக அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்று கூறி வருகின்றார் கள். இப்போதைய நிலையில் மாகாண சபை முறைமையென்பது ஒரு கனவுக்குடமாக இருக்கிறன்றது.

இருந்த போதிலும் 60 வருடப் போராட்டங் களை ஒன்று கூட்டிக்காட்டக்கூடிய ஜனநாயகப் போர்க்களமாக வடமாகாண சபை தேர் தல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உண் மையே.
சர்வதேசத்தின் வலியுறுத்தலால் நடத்தப் படுகின்ற இந்த தேர்தலில் தமிழ் மக்களின் ஒன்று கூட்டிய பலமும் கோரிக்கையும் காட் டப்பட வேண்டுமென்பதும் உண்மையே.

ஆனால், அதற்குரிய ஜனநாயக கைங்கரியங்களாக இருப்பது வாக்குவல்லமையாகும். இந்த வாக்கு வல்லமையை அங்குலம் அங் குலமாகவும் வீடு வீடாகவும் அளந்தெடுத்து வாக்குப் பண்ண வைக்கக்கூடிய விழிப் புணர்வொன்று மிக மதி நுட்பமாகவும் சாண க்கியமாகவும் கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் உணர்ந்து கொள்ள வேண் டும்.

பொதுவாக சொல்லப் போனால் 1977 ஆம் ஆண்டுக்கு முன் ஒரு ஆணையை தமிழ் மக்கள் எப்படித் தந்தார்களோ அதை விட இரட்டிப்புத் தன்மையான பலத்தையும் மக்கள் எழுச்சியையும் காட்ட வேண்டிய காலத்தின் நியதி நம்முன்னே கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே உண்மை.
« PREV
NEXT »

No comments