Latest News

August 13, 2013

புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி ஆலோசனை
by admin - 0

புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி ஆலோசனை புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினா்களுடன் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகின்றது. அமைச்சா்களான பேராசியரியா் ஜி.எல.பீரிஸ் நிமல்சிறிபால டி சில்வா, பசில் ரஜபக்ச ஆகியோரின் பெயா்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. புதிய பிரமா் தொடா்பாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அரசாங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இன்னனும் முடிவுகள் எடுக்கப்படவில்லை.
தற்போதைய பிரதமா் டி.எம்.ஜயரட்ன அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்த ஆண்டு தை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனாலும் புதியதாக ஒருவா் தொிவாகும் வரை அவரை பிரதமாராக தொடர்ந்து பதவி வகிக்குமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய பிரதமா் தொடா்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மூத்த அமைச்சா்களுடனும் ஜனாதிபதி கலந்தரையாடுகின்றார் என அமைச்சரவை தகவல்கள் கூறுகின்றன.
« PREV
NEXT »

No comments