ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது இலங்கை விஜயத்தின் போது, பக்கச்சார்பற்ற அறிக்கை ஒன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நவநீதம்பிள்ளையிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பிதழ்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவருக்கு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்சமயமே சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கை வரவுள்ள அவர், மேம்பாட்டு நடவடிக்கைகளை நேரில் அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இதனையடுத்து அவர் பக்கச்சார்பற்ற மற்றும் நடுநிலையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment