
ஐக்கிய நாடுகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வதில் எந்த தடையுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் அமைதி, சுதந்திரமான சூழ்நிலைகள் குறித்து நேரடியாக கண்டறிவதற்காக மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். அவர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை செல்லும் நவநீதம்பிள்ளை, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு பயிற்சிகள், அவர்களின் சமூகமயப்படுத்தல் நல்லிணக்கம், உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்படட விடயங்களை அமுல்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போன்ற விடயங்களை ஆராய முடியும் என பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை பல்வேறு நபர்கள், குழுக்கள் தகவல்களுக்கு அமைய செயற்படாமல், இலங்கையின் தற்போதைய உண்மையான நிலைமையை நேரில் காண ஆணையாளருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாரச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், அதன் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை விசேட அம்சமாகும்.
No comments
Post a Comment