Latest News

August 09, 2013

வடக்கில் சீனாவின் உதவியுடன் இராணுவக் குடியேற்றங்கள்: எம்.கே. சிவாஜிலிங்கம்
by admin - 0

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் சீனாவின் உதவியுடன் பாரிய இராணுவத் தளங்களையும் சுமார் ஒரு இலட்சம் இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்தவும் அரசாங்கம் முற்பட்டு வருவதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் காணிகளையும் வீடுகளையும் விட்டு இராணுவத்தினர் வெளியேறுவது போன்ற தோற்றப்பட்டினைக் காட்ட இந்த அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. ஆனால் வலி. வடக்கிலுள்ள 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமான பொது மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரித்து வருகின்றது.

பொது மக்களின் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்ற இராணுவம் விடுவிக்கப்பட்ட இடங்களுக்கு அருகிலுள்ள ஏனைய காணிகளைச் சுவீகரித்து அந்தந்தப் பகுதிகளில் சீன அரசின் உதவியுடன் நிரந்தரப் படை முகாம்களை அமைத்து வருகின்றது.

« PREV
NEXT »

No comments