அடேங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு காக்கா பிடிக்க மகிந்தர் கற்றுக்கொண்டார் போல இருக்கே என்று எதிர்கட்சிகள் பேசிவருகிறார்கள். காக்கா பிடிப்பதில் டாக்டர் பட்டம் வாங்காத குறையாக மகிந்தர் இருப்பது தற்போது அல்லவா வெளிச்சத்துக்கு வருகிறது. அப்படி என்ன விடையம் என்று யோசிக்கவேண்டாம், சரி வாருங்கள் விடையத்துகுப் போகலாம்!
1897ம் ஆண்டு பிரித்தானியர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மாகாராணி விக்டோரியாவின் சிலை ஒன்று இலங்கையில் இருக்கிறது. பழமைவாய்ந்த அந்த சிலையை பிரித்தானியர்கள் இலங்கையில் விட்டுச் சென்றுவிட்டார்கள். பின்னர் இந்தச் சிலையை யார் அலரி மாளிகைக்கு கொண்டுசென்றார்கள் என்று தெரியவில்லை. ஜே.ஆர் ரா... இல்லை பிரேமதாசவா என்று தெரியவில்லை. பலகாலமாக இது அலரிமாளிகையில் இருந்துவந்தது.
சகுனம் ,யோசியத்தில் நம்பிக்கையுள்ள மகிந்த ராஜபக்ஷவுக்கு இச்சிலை தொடர்பாக ஒருவர் சில குறிப்புகளைச் சொல்லியுள்ளார். குறிப்பிட்ட அச் சிலை அபசகுனமானது என்றும் அது அன்-லக்கி என்றும் மகிந்தருக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, கொழும்பில் உள்ள மியூசியத்தின் பின்புறத்தில் போடப்பட்டது.சில வருடங்களாக அது அங்கே பின் அறையில் தான் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் தொடக்கம், இச் சிலையை தேடிவந்த மகிந்தரின் அடியாட்கள் அதனை வடிவாக தூசி தட்டி எடுத்துச் சென்றுள்ளார்களாம்.
இதுவரை காலமும் கவனிப்பார்ரற்றுக் கிடந்த இந்த விக்டோரியா சிலைக்கு அப்படி என்ன மவுசு வந்தது என்று நினைக்கிறீர்களா ? எல்லாம் காரண காரியமாகத் தான் நடக்கிறது.
அதாவது இன்னும் சில மாதங்களில் இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடக்கவிருக்கிறது. அதில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதில் அவரது மகன் சாள்ஸ் கலந்துகொள்கிறார். எப்படி என்றாலும் சாள்ஸ் மற்றும் அவரது காதலி கமீலா பாக்கர் ஆகியோர் அலரிமாளிகை செல்வார்கள்.அங்கே மகிந்தர் கொடுக்கும் விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார்கள். அவர்கள் அலரி மாளிகை செல்லும்வேளை அங்கே இந்த சிலையைக் கண்டால்(பாட்டியின் சிலை) சாள்ஸ் உச்சி குளிர்ந்துவிடுவார் அல்லாவா. அதுவும் 18ம் நூற்றாண்டுச் சிலை!
இதனால் தான் இதனை தூசு தட்டி எடுத்து, மீண்டும் அலரி மாளிகையில் வைக்க மகிந்தர் திட்டம் தீட்டியுள்ளாராம். இதற்கான வேலைகள் நடக்க ஆரம்பித்துள்ளது. இவை சிங்கள மீடியாக்களில் பரவலாக அடிபட ஆரம்பித்துவிட்டது.
இதனால் இச்சிலையை வேறு இடத்துக்கு மாற்றுவாரோ தெரியவில்லை. ஆனால் சிலையை தூசு தட்டி, அதனை புதுப்பிக்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாள்ஸ் அலரி மாளிகை வரும்போது எவராவது ..கா.... கா.... கா... என்று கத்தாமல் இருந்தால் சரி ! இன்னும் கொஞ்ச நாளில் இதனை நாம் TV ல் பார்க்க தானே போகிறோம்...
No comments
Post a Comment