நேற்றையதினம் மதியத்திலிருந்து மாலை வரை கனடியத் தமிழர்கள் டொரொண்டோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மதியத்திலிருந்து திரைப்படம் யாவும் இடை நிறுத்தப்பட்டிருந்தது. அரசின் சதியின் பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் 'மெட்ராஸ் கஃபே' என்ற திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் ஆகஸ்டு மாதம் 23 ம் திகதி திரையிட முயற்சிக்கப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படுவதை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து மாபெரும் மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இதனை அடுத்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரைஅரங்குகளும் இப்படத்தை திரையிட மறுத்திருந்தனர். இந்தியாவின் மற்றய மானிலங்களிலும் இப்போராட்டம் விஸ்தரித்திருந்தது.
சனல்-4 மாதிரியான ஆதார பூர்வமான திரைப்படத்தை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரசு, இப்படியான புனை கதைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் திரைப்படத்தை மூன்று மொழிகளில் திரையிட்டு மக்களின் மனதில் இராணுவத்தை மேலாகவும், தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளையும், போராட்டத்தையும் இழிவு படுத்தவும் முயற்சிக்கின்றது.
ஈழத் தமிழர்களது நீதிக்கான நியாயமான விடுதலைப் போராட்டம் தமிழக தமிழர்களையும் உலகத் தமிழ் மக்களையும், வேற்று இனத்தவர்களையும் தன்பால் ஈர்த்து அணிசேர்த்து வலுவடைந்து வரும் நிலையில் இந்த உணர்வை சிதைத்து எம் தமிழீழ விடுதலைபோராட்டதின் பால் தமிழர்க்கு உள்ள நம்பகத்தன்மையையும் பற்றுறுதியையும் முறியடிக்கும் நோக்கோடு திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.
தமிழகத்தில் மட்டுமன்றி தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை பாதிக்கும் வலுவான ஊடகம் திரைத்துறை என்பதை உணர்ந்து இலங்கை அரசு அதனையே ஆயுதமாக தேர்ந்தெடுத்து இந்த சக்திவாய்ந்த ஊடகத்தினூடாக ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தை வில்லத்தனமான சூழ்ச்சியோடு எமக்கு எதிரான ஆயுதமாகப் படைத்துள்ளது . அது மட்டுமன்றி தமிழர்களை இழிவுபடுத்தும் இத்திரைப்படத்தை உலகெங்கும் திரையிட்டு தமிழர்களின் நிதியை அபகரிப்பதோடு தமிழர்க்கெதிரான சூழ்ச்சியான இழி கருத்தையும் வஞ்சகத்தோடு விதைக்கும் வஞ்சனையோடு உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.
இந்த திரைப்படத்தை வன்மையாக கண்டித்து எமது எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டத்தில் தொடர்ந்தும் அணிதிரள்வோம் !
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை

No comments
Post a Comment