கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 67ஆவது சுதந்திர தினமான இன்று, தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததன் பின்னர் அங்கு உரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன் எடுத்து வைத்தது. தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் உன்னதமான சாதனைகளை இந்த அரசு செய்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே வழியில் கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment