Latest News

August 15, 2013

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே இலங்கையில் எல்லா குடிமக்களும் சமபங்காளராக வாழமுடியும்! - இந்திய உயர்ஸ்தானிகர்
by admin - 0

சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே,இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா, இன்று இந்தியாவின் 67வது சுதந்திரத்தை முன்னிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் நீதியானதானவும் நியாயமான முறையிலும் நடைபெறும் என நாம் நம்புகின்றோம்.
இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளது.
மேலும், தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாக, இந்தியாவுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.
சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று தெரிவித்தார்.
போரின் முடிவு, எல்லா சமூகங்களும் இலங்கையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments