Latest News

August 10, 2013

விமானத்தை பாதுகாக்கும் நாடு தலைவர்களை பாதுகாக்காதா என்ன…? -ஈழதேசம்
by admin - 0

சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்ற
முதுமொழியை மெய்பிப்பதாக ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்காவிற்கு ஏற்பட்டுள்ள தீடிர் பாசம் அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ சொல்லிக்
கொள்ளும்படியான ஆதாயங்கள் ஏதுமற்ற நிலையில் ஆபிரிக்க தேசத்தின்
மீது சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளமை புலிகளை தேடியே என்பதை அறிய
முடிகின்றது. சிறிலங்கா அதிபர் ராஜபக்சே முதற்கொண்டு அறிவிக்கப்படாத சிறிலங்காவின் அதிபரான கோத்தபாய
ராஜபக்சே வரை பயணங்களை மேற்கொண்டு உறவை புதுப்பிப்பதற்கு வலுவான காரணமாக மறைவாகியுள்ள புலிகளின் முக்கிய தலைவர்களைத் தேடியே என்பதாக அறியமுடிகின்றது. அண்மையில் சிறிலங்கா அதிபர் தன்சானியாவிற்கு சென்று திரும்பியதையும்
கோத்தபாய ராஜபக்சே உகண்டாவிற்கு சென்று திரும்பியதையும் 12ஆபிரிக்க
நாடுகளுடன் இராசதந்திர உறவு தொடங்கப்பட உள்ளதாக
சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் பீரிஸ் அறிவித்துள்ளமையும் குறுகிய
காலஇடைவெளியில் நடந்தேறியுள்ளமை அது குறித்து கவனத்தை குவித்துள்ளது. இனப்படுகொலை குறித்து உலக நாடுகளும் உலக மன்றங்களும்
நெருக்கடிகளை கொடுத்து வருகையில் உலக மாமன்றங்களில் எதுவித
தாக்கங்களையும் ஏற்படுத்தும் வல்லமை அற்ற இந்த நாடுகளிற்கு மகிந்தவும்
கோத்தாவும் பயணங்களை மேற்கொள்வது எமது ஐயப்பாட்டை கூர்மைப்படுத்தியது. 12ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவை ஆரம்பிக்க முயற்சிக்கும்
சிறிலங்கா அண்மையில் உகண்டா நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைநகரங்களில்
வதிவிடப் பிரதிநிதிகளிற்கான இல்லங்களை அமைத்துள்ளது. ஆபிரிக்க நாடுகளுடனான உறவு விஸ்தரிப்பு குறித்து கருத்துரைத்துள்ள பீரிஸ்
வர்த்தக நோக்கங்கள் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக
குறிப்பிட்டுள்ளார். கிழக்கு ஆபிரிக்க நாடுகள் தமக்குள் பொதுவான
சந்தை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதால் அவர்களுடன் உறவை வளர்த்துக்
கொள்வதன் மூலம் தமது வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும் எனவும் மேலும்
கூறியுள்ளார். மேலோட்டமாக பார்த்தால் நியாயமாக தெரிந்தாலும் 2009 மே-18ற்கு பின்னர் மறைவாகியுள்ள புலிகளின் முக்கிய தலைவர்கள் ஆபிரிக்க தேசங்களில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த திடீர் உறவின் விரிவாக்கத்தின் பின்னணியாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படைக்கு சொந்தமான 11விமானங்கள் ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை உறுதிபடத்
தெரிந்திருந்த போதும் சிறிலங்காவால் அவற்றை கைப்பற்ற
இன்றுவரை முடியாதுள்ளது. ஆரம்பத்தில் மிஞ்சிப்பார்த்த ராஜபக்சே கோஷ்டி எரித்திரியாவின் உறுதியான
நிலைப்பாட்டையடுத்து கைக்கூலி கருணாவை வைத்து முயற்சித்திருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது. எதற்கும் மசியாத எரித்திரியாவிடம் கெஞ்சியும் பார்தது மகிந்த கோஷ்டி. உங்கள் நாட்டில் எங்கள் தூதரகத்தை ஆரம்பித்து புதிய உறவிற்கு அடித்தளம் இடுவோம் என நயவஞ்சக முகமும் காட்டிப்பார்தது மகிந்த கோஷ்டி. இன்றுவரை எரித்திரியாவில் உள்ள தமிழீழ வான்படைக்கு சொந்தமான
விமானங்களை நெருங்கமுடியவில்லை இவர்களால். விமானத்தை பாதுகாக்கும் நாடு தலைவர்களை பாதுகாக்காதா என்ன…? இந்த சந்தேகம்
எமக்கு வருவதற்கு முன்னர் கோத்தபாயவிற்கு வந்துவிட்டது. அதனால்தான் ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டு தமது புலனாய்வு வலையமைப்பை ஆபிரிக்காவில் விரிக்க மும்முரமாக திட்டமிடுகின்றது. முள்ளிவாய்க்காலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் அந்த நாட்டிற்கு தப்பிச்
சென்றார்கள்.. இல்லை இல்லை இந்த நாட்டிற்குதான் தப்பிச் சென்றார்கள் என்ற
தகவல்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அலையடித்துக் கொண்டிருக்கின்றது. தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிங்களம் பொம்மை உடலைக்காட்டினாலும்
பாதுகாப்பாக வெளியேறிவிட்டார் என்பதே உலகத் தமிழர்களது ஆழ்மன நம்பிக்கை இடித்துரைத்துக் கொண்டுள்ளது. அந்தவகையில் பெரும்பாலான தகவல்கள் செய்திகளின்படி ஆபிரக்க நாடான எரித்திரியாவே முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த பயணத்தின் முடிவிடமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஒருவேளை இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் இந்த நான்கு ஆண்டுகளில் ஒரிடத்தில் தலைவர் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்க வாய்புகள் மிகமிகக் குறைவு. ஏற்கனவே ஆபிரிக்காவில் தமிழீழ கடற்புலிகளிற்கு சொந்தமான பயிற்சித்தளம் ஒன்று பல ஆண்டுகளிற்கு முன்னரே இயங்கிவருவதாக செய்திகள்
வெளிவந்திருந்தது. இந்த செய்திகள் தரவுகள் அனைத்தும் ஆபிரிக்காவில்
புலிகளிற்கு பாதுகாப்பான தளங்கள் இருந்துள்ளதையே உறுதிப்படுத்துகின்றன. இவற்றின் பின்னணியிலேயே கோத்தபாயவின் நிம்மதி தொலைக்கப்பட்டு ஆபிரிக்க காடுகளில் புலிகளை தேடும் நடவடிக்கை இராஜதந்திர போர்வையில் அரங்கேற்ற முயற்சிக்கப்படுகின்றது. முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். உள்ளுரில் உண்மையான புலிகளை விட்டுவிட்டு அப்பாவித் தமிழ் இளைஞர்
யுவதிகளை புலிமுத்திரை குத்தி கைதுசெய்து தமது இயலாமையை வெளிப்படுத்திவர இவர்களா கடல்தாண்டி புலிவேட்டைக்கு செல்வது….? கேட்டா கேளுங்க… கேட்காட்டி போங்க… ஆபிரிக்க காடுகளில் உண்மையான காட்டுப்புலிகள் நிறைய நிற்கிதாம். இரண்டுகால் புலிகளை பிடிக்கிறம் என்டு நான்கு கால் புலிகளிடம் மாட்டிவிடாதீர்கள். விளைவுகளிற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதான் நீங்கள் சொல்வீர்களே ஒரே நாடு ஒரே மக்கள். நாங்கள் எல்லாம் சகோதரர்கள்
எண்டு. அந்த பாசத்தில சொல்கின்றோம். கேட்டா கேளுங்க…
கேட்காட்டி போங்க… 

ஈழதேசம் இணையம்.
« PREV
NEXT »

No comments