Latest News

August 10, 2013

இலங்கையின் பிடிவாதம் தளர்ந்தது - ஐ.நாவின் விமானத்திலேயே நவநீதம்பிள்ளை வடக்குகிழக்கிற்கு பறப்பார்!
by admin - 0

இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பயணத்துக்குத் தேவையான விமானத்தை ஒழுங்கு செய்து கொள்ளுமாறு இலங்கை அரசு ஐ.நா அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தில் விடாப்பிடியாக இருந்த இலங்கை அரசு இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பு வரும் நவநீதம்பிள்ளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிடவுள்ளார். இந்தப் பயணங்களுக்கு, இலங்கை விமானப் படையினால் நடத்தப்படும், 'ஹெலி ருவர்ஸ்' விமானங்களைப் பயன்படுத்தும்படி, நவநீதம்பிள்ளையின் பயண ஒழுங்குகளைக் கவனிக்க அண்மையில் இலங்கை வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாயிடம், இலங்கை அரசு வலியுறுத்தியிருந்தது. ஆயினும், இலங்கை விமானப்படை விமானங்களில் பயணம் செய்வதற்கு நவநீதம்பிள்ளையின் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.இதனால் இருதரப்புக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் விரும்பியவாறு, தனியார் விமானத்தையோ, அல்லது ஐ.நா விமானத்தையோ நவநீதம்பிள்ளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இலங்கை அரசு இப்போது ஜெனிவாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இலங்கை விமானப்படை விமானங்கள் மீது நம்பிக்கை இல்லையாம். இனிமேல் நாம் என்ன செய்வது? அவர் ஐ.நா விமானத்திலேயே வந்து வடக்கு உள்ளிட்ட தேவையான அனைத்து இடங்களுக்கும் சென்று, எதிர்பார்க்கும் உண்மைகளைக் கண்டறிய அவருக்கு அரசு ஒத்துழைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments