Latest News

August 23, 2013

அறப்போர் -( DVD) இறுவட்டு விற்பனை
by admin - 0

தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அறப்போர்’ ஆவணப்படத்தின் டிவிடி பல போராட்டங்களிற்கு பின்னர் உலகெங்கும் விற்பனைக்கு வருகின்றது. 
 
கோடிகள் செலவு செய்து விளம்பரம் செய்யவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ இது ஒன்றும் மசாலா படம் அல்ல நண்பர்களே . இது எமது வரலாறு! எமது வரலாற்றை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையுமாகும். அதற்கான முதல் நகர்வை இந்த அறப்போர் உங்களிற்கு ஏற்படுத்தி தரும் என நாம் நம்புகின்றோம். இது இனி உங்களின் படம்! உலகெங்கும் எடுத்து செல்வோம் வாருங்கள்.
 
இந்த அறப்போரின் தமிழ் வடிவத்தை தமிழ் மொழி பேசுபவர்களின் நாடித்துடிப்பிற்கு ஏற்றாற்போல் உருவாக்கியுள்ளோம். சோர்ந்த தமிழனை இது தட்டியெழுப்பும்!
 
மேற்குலகத்தின் பார்வை என்பது எமது பார்வையிலிருந்து சற்று வேறுபடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே ஏனைய மொழிகளில் அறப்போர் பார்வையிடும் போது அதில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். மேற்குலகத்தின் சட்டதிட்டங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குள் உள்ளோம். சில காட்சிகள் தான் மாறினவே தவிர மையக்கருத்து எங்கும் மாறவில்லை. அதனை மாற்றவும் நாம் முன்வரமாட்டோம். 
 
அறப்போர் பற்றிய விபரங்கள்:
----------------------------------------------
 
வடிவமைப்பு: DVD
நேரம்: தமிழ் 40 நிமிடங்கள் / ஏனைய மொழிகள் 35 நிமிடங்கள்
சப் டைட்டில்: ஆங்கிலம், ஐேர்மன், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலி
விலை: 10 CHF/EUR/GPB/USD (அனுப்பும் கூலி உட்பட)
 
டிவிடி வாங்க விரும்பும் உறவுகள் தபால் முகவரி (ஆங்கிலத்தில்) மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.
 

அனுப்பி வைக்கவேண்டிய முகவரி:

உங்களின் நண்பர்கிற்கும் இந்த தகவலை பகிரவும்.

நன்றி!
« PREV
NEXT »

No comments