பிரிட்டனைச் சேர்ந்த யுவதி நரம்பு தொடர்பான அரிய வகை கோளாறினால் தொடர்ச்சியாக நீண்ட நாட்களாக உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இமார்ல் டுப்ரி என்ற 23 வயதான யுவதியே இந்த அரியவகையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார். கடந்த வருடம் இவர் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 59 நாட்கள் உறங்கியுள்ளார். இதன்போது குழந்தைகள் போல அவர் நடந்துள்ளார்.
“கிளீன் லெவின் சின்ட்ரொம்” அல்லது “ஸ்லீப்பிங் பியூட்டி சின்ரொட்” எனும் கோளாறே தொடர்ச்சியாக இந்த யுவதி உறங்குவதற்கு காரணமாம். உலகில் சுமார் 1,000 பேருக்கு மட்டுமே இக்கோளாறு உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைக் கட்டுப்படுத்த மருத்துவ ரீதியாகவும் வழிகள் இல்லை. என்னால் இக்கோளாறினை கட்டுப்படுத்தவும் முடியாது. எனது எதிர்காலம் கேள்விக் குறியாகவுள்ளது. ஆனால் நான் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என இமார்ல் தெரிவித்துள்ளார்.
இமார்லை ஒரு குழந்தையைப் போல பராமரிக்க வேண்டியுள்ளதாக அவரது தாய் கூறுகிறார். இந்நிலையில் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் தவிக்கும் இமார்ல் உளவியலில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.
No comments
Post a Comment